tamilnadu

img

கொரோனா ஊரடங்கால் வேலை இழந்து தவிக்கும் பொது மக்களுக்கு ரூ. 7,500 நிவாரணம் வழங்குக! தஞ்சையில் 105 இடங்களில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், மே 20- கொரோனா ஊரடங்கால் வேலை இழந்து தவிக்கும் பொதுமக்களுக்கு ரூ. 7,500 நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில், புதன்கிழமை தஞ்சை மாவட்டத்தில், 105 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக் கமிட்டி செயலாளர்கள், கட்சியி னர் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர்.

 அனைத்து, குடும்ப அட்டை தாரர்களுக்கும் கொரோனோ நிவார ணமாக ரூ. 7,500 வழங்க வேண்டும். அங்காடிகளில் அனைத்து பொருட்களையும் தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும். தொழிலாளர்கள் வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்றக்கூடாது. இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யக்கூடாது. அரசு ஊழியர்கள் பஞ்சப்படி உயர்வு ரத்து செய்ததை திரும்பப் பெற வேண்டும்.  அரசு ஊழியர் ஓய்வு வயதை 58 லிருந்து 59 ஆக மாற்றியதை திரும்பப் பெற வேண்டும். டாஸ்மாக் மதுக் கடைகளை மூட வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தை சீர் குலைக்காமல் அனைத்து ஊராட்சிகளிலும் முறை யாக அமல்படுத்த வேண்டும். அனை வருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

தஞ்சாவூர் 
தஞ்சாவூர் மாநகரம், ஆற்றுப் பாலம், சிவகங்கை பூங்கா, வடக்கு வாசல், கரந்தை, பூக்காரத் தெரு, பள்ளி யக்ரஹாரம், கீழவாசல், பாத்திமா நகர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்க ளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. செந்தில்குமார், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் இரா.புண்ணிய மூர்த்தி, என். சிவகுரு, சரவணன், மாநகரச் செயலா ளர் என்.குருசாமி உள்ளிட்ட பலர் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் ஒன்றியம் 
தஞ்சை ஒன்றியம் வனதுர்கா நகர், லெட்சுமி நகர், மேட்டுத்தெரு, ரெட்டிப்பாளையம், தெற்கு பூக்கொல்லை, விஏஓ அலுவலகம், கல்விராயன்பேட்டை, நாகத்தி, ஏழுப்பட்டி, மாத்தூர், உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  தஞ்சை ஒன்றிய செயலாளர் எம்.மாலதி, மாவட்டக் குழு உறுப்பினர் கே.அபிமன்னன், ஒன்றியக் குழு உறுப்பினர் பி.சங்கிலி முத்து, டி.கோ விந்தராஜூ, ஏ.கருப்புசாமி மற்றும் கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

திருவையாறு 
திருவையாறு ஒன்றியத்தில் அம்மையகரம், பூதராயநல்லூர், வரகூர், செந்தலை, கருப்பூர், வளப்பக் குடி, திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை உள்ளிட்ட 9 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கட்சி ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா மாவட்ட குழு உறுப்பினர் எம்.ராம், எம். பழனிஅய்யா, ஒன்றி யக் குழு உறுப்பினர்கள் மற்றும் கிளைச்  செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

மதுக்கூர் 
மதுக்கூர் ஒன்றியம், மதுக்கூர் பேருந்து நிலையத்தில், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வை.சிதம்பரம் தலைமையிலும், வடக்கு வாட்டாகுடி தியாகி இரணியன் நகரில், கிளைச் செயலாளர் எல்.முருகவேல் தலைமையிலும், அத்திவெட்டியில், பி. பாலசுப்ரமணியன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பூதலூர் தெற்கு 
பூதலூர் தெற்கு ஒன்றியம், பூதலூர், செங்கிப்பட்டி, வெண்டையம்பட்டி, இராயமுண்டான்பட்டி, அயோத்திப் பட்டி, துருசுப்பட்டி, காமாட்சிபுரம், மனையேறிப்பட்டி, சுரக்குடிப்பட்டி உள்ளிட்ட 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50-0க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள்கலந்து கொண்டனர்.

பூதலூர் வடக்கு 
பூதலூர் வடக்கு ஒன்றியம் திருக் கதட்டுப்பள்ளி, கல்லணை, பழமா னேரி, திருச்சென்னம்பூண்டி, ஒரத்தூர், ஆற்காடு, கடம்பங்குடி உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் கே.காந்தி மற்றும் நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

அம்மாபேட்டை 
அம்மாபேட்டையில் நகரச் செயலா ளர் ரவி தலைமையிலும், கோவிலூரில் ஒன்றியச் செயலாளர் ஏ.நம்பிராஜன் தலைமையிலும், மாரியம்மன் கோயி லில் ஒன்றியக்குழு உறுப்பினர் தங்கை யன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வி, நிர்வாகிகள் மற்றும் கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

பட்டுக்கோட்டை 
பட்டுக்கோட்டை நகரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவ லகம் எதிரில் நடைபெற்ற போராட்டத் திற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்த சாமி தலைமை வகித்தார். கரம்ப யத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.செல்வம் தலைமையிலும், வீரக்குறிச்சியில் ஒன்றியக்குழு உறுப்பி னர் எம். பெஞ்சமின் தலைமையிலும், தாமரங்கோட்டை விவசாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.கோவிந்த சாமி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து இடங்களிலும் நடை பெற்ற, போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் காலத்தை ஒரு வருடம் நீட்டித்து தர வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தப்பட்டது.

பேராவூரணி 
பேராவூரணி ஒன்றியம் ஆவணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சி ஒன்றியச் செயலாளர் ஏ.வி.குமார சாமி தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.வாசு முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சேதுபாவாசத்திரம் 
சேதுபாவாசத்திரம் ஒன்றியம் குருவிக்கரம்பை, பெருமகளூர், மணக்காடு, சேதுபாவாசத்திரம், கழனி வாசல், கழுமங்குடா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பி னர் வி.கருப்பையா, ஒன்றியச் செயலா ளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.

ஒரத்தநாடு 
ஒரத்தநாடு ஒன்றியம், ஒக்கநாடு கீழையூர், ஒரத்தநாடு கடைவீதி, நெய்வாசல், தெற்கு நத்தம், பாப்பா நாடு, ஆம்பலாபட்டு தெற்கு கீழக் கோட்டை உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் என்.சுரேஷ் குமார், மாவட்டக் குழு உறுப்பினர் கோவிந்த ராஜூ, ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திருவோணம்
திருவோணம் ஒன்றியம் ஊரணி புரத்தில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பி.கோவிந்தராஜ் தலைமையிலும், அனந்தகோபாலபுரம், கொள்ளுக் காட்டில் மாவட்டக் குழு உறுப்பினர் கே.ராமசாமி தலைமையிலும், தோப்ப நாயகத்தில் விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் முருகேசன் தலை மையிலும், நெய்வேலியில் ஒன்றி யக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், பெரியசாமி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

;