tamilnadu

img

லயன்ஸ்மேன் மீது பந்தை அடித்த விவகாரம்...  அமெரிக்கன் ஓபன் டென்னிஸ் தொடலிருந்து ஜோகோவிச் தகுதியிழப்பு...    

நியூயார்க் 
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரிக்கன் ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் கடந்த மாதம் 31-ஆம் தேதி தொடங்கியது. ரசிகர்கள் இல்லாமல் வீரர் - வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள இந்த தொடரில் தற்போது 4-ஆம் சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆடவர் 4-ஆம் சுற்று ஆட்டத்தில் உலகின் முதல்நிலை வீரரும், அதிரடி நாயகருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் இளம் வீரரான காரியானோ பஸ்டாவை எதிர்கொண்டார். முதல் செட்டில் பஸ்டா 6-5 என்ற கணக்கில்  முன்னிலை வகித்த பொழுது, ஜோகோவிச்  புள்ளிகளை இழந்த கடுப்பில் பந்தை பின்புறமாக ராக்கெட் (டென்னிஸ் மட்டை) மூலம் ஓங்கி அடித்தார். அந்த பகுதியில் பணியாற்றிய வயதான பெண் லயன்ஸ்மேனின் (எல்லை நடுவர்) முகத்தில் பந்து பட்டது. என்ன நடந்ததது என்பது புரியாமலே லயன்ஸ்மேன் நிலைகுலைந்து கீழே விழுந்தார். 

இந்த விவகாரம் மூலம் ஒழுங்கு நடவடிக்கைக்கு தயாரான அமெரிக்கன் டென்னிஸ் நிர்வாகம் ஜோகோவிச்சிடம் மைதானத்திலேயே விசாரணை செய்து தகுதியிழப்பு செய்வதாக அறிவித்தது. ஜோகோவிச்சும் அவர்களிடம் கெஞ்சி கதறி பார்த்தார், பலனில்லை. இதனால் அவர் மைதானத்தில் இருந்து உடனடியாக வெளியேறினார். உலகின் நம்பர் 1 வீரர் தகுதியிழப்பு செய்யப்பட்டது டென்னிஸ் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.     

;