tamilnadu

img

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறுக மார்ச் 17-ல் தொடர் முழக்கப் போராட்டம்

சேலம், மார்ச் 14- குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மார்ச் 17ஆம்  தேதியன்று சேலத்தில் தொடர் முழக்கப் போராட் டம் நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் சனியன்று நடைபெற்றது.  குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலி யுறுத்தி மார்ச் 17 தேதி யன்று காலை 10 மணி முதல் மார்ச்  18 காலை 10 மணி வரை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் முழக்க போராட்டம் நடைபெற உள்ளது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் சேலம் வி.பி. சிந்தன் நினைவகத்தில் நடைபெற்றது. இதில்,இந்திய மக்களைப் பிளவு படுத்தும் வகையில் மத்திய பாஜக  அரசால் ஏற்படுத்தப்பட்ட சிஏஏ, என்ஆர்சி,  என்பிஆர்  உள்ளிட்டவைகளை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை  வலியுறுத்தி மக்கள் ஒற்றுமை மேடையின்  சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடை பெறுகிறது. இப்போராட்டத்தில் அனைத்து  தரப்பு மக்களையும் ஒன்று திரட்டுவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.  இக்கூட்டத்தில் மக்கள் ஒற்றுமை  மேடையின் தலைவர் திமுக ஜி.கே. சுபாஷ், ஒருங்கிணைப்பாளர் எம். குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, சிஐடியு மாவட்ட செயலாளர் டி.உதயகுமார்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினர் என்.பிரவீன் குமார், விடுதலை சிறுத் தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளர் காஜாமைதீன், மனிதநேய மக்கள் கட்சி யின் ஷேக் முஹம்மத் மற்றும் முகமது அஷ்ரப், தமுமுக சையது முஸ்தபா, மஜ்லிஸ் கட்சி இமாம் மைதீன், ஐயூஎம்எல் நசீர்  அகமது உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.

;