tamilnadu

img

சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு

  சேலம், பிப். 22- சேலம் ஆத்தூரில்  பெரியார் சிலை முன்பு   எழுதப்பட்டுள்ள அவரின் பொன்மொழி கள் மீது மர்ம நபர்கள் காவி சாயம் பூசி சென்ற  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர் பேருந்து நிலையம் அருகில் வெண்கலத்தாலான பெரியார் சிலை அமைந்துள்ளது. இந்த  சிலையை கடந்த 1986 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திறந்து  வைத்தார். சிலையை சுற்றி இரும்பு  கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு அந்த  வேலிகளை சுற்றிலும் பெரியாரின் பொன் மொழிகள் எழுதப்பட்டுள்ளது. இந் நிலையில் சனியன்று பெரியார் சிலையை சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் இரும்புக் பதாகையில் எழுதி வைக்கப்பட்டிருந்த பெரியாரின் பொன்மொழிகள் மீது மர்ம ஆசாமிகள் காவி சாயத்தை பூசி விட்டு சென்றுள்ளார்கள் .  இதுகுறித்து தகவலறிந்த திராவிடர் கழகத்தினரும், திமுக நிர்வாகிகளும் பெரி யாரின் சிலையை பார்வையிட்டு, பெரி யாரின் பொன்மொழி எழுத்துகளில் காவி சாயத்தைப் பூசி சென்ற சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காவி சாயத்தை பூசி சென்ற மர்ம  நபர்களை தேடி வருகிறார்கள். இச்சம்பவத் தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட் டுள்ளது.

;