tamilnadu

img

மேட்டூரில் மின் உற்பத்தி குறைப்பு

சேலம்:
தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், மின் தேவை குறைந்துள்ளது. எனவே, மேட்டூர் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூரில் உள்ள முதல் பிரிவு அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட 4 அலகுகளும், 2-வது பிரிவில் 600 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட ஒரு அலகும் உள்ளது.தற்போது, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் மின் தேவை குறைந்துள் ளது. இதனால், மேட்டூர் அனல் மின் நிலைய முதல் பிரிவில், கடந்த 3 நாட்களுக்கு முன்னர் 4-வது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப் பட்டது. நேற்று 3-வது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.ஏற்கெனவே பராமரிப்பு காரணங்களுக் காக 2-வது அலகின் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், தற்போது, 840 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப் படுகிறது.இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்களன்று  77.24 அடியிலிருந்து 76.06 அடியாக குறைந்தது..  நீர் இருப்பு 38.142 டிஎம்சி-யாக உள்ளது.  விவசாய பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 13,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

பவானிசாகர் அணையில் நீர்மட்டம் அதிகரிப்பு
இந்நிலையில்  ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், பல லட்சம் விவசாய விளை நிலங்களின் வாழ்வாதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்கி வருகிறது. அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளான நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.கடந்த 6-ம் தேதி 81 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம்  82.40 அடியாக உயர்ந்து உள்ளது. அணைக்கு விநாடிக்கு 768 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்துக்கு காலிங்கராயன் வாய்க்காலில் 250 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் குண்டேரிப்பள்ளம், வரட்டுப்பள்ளம் தடுப்பணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

;