tamilnadu

img

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் திருக்குறள், சிலப்பாதிகாரம் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு

சென்னை:
மத்திய அரசின் கட்டுபாட்டில் இயங்கும் சி.பி.எஸ்.இ. எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி  30 விழுக்காடு பாடங்களை குறைக்க போவதாக அறிவித்துள்ளது.

இதற்கு சங்கத்தின்  மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், மாநில செயலாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்  மாணவர்களுக்கான பாடச்சுமையை குறைப்பதாக கூறி தனது காவிபயங்கரவாத அரசியல் நிரலை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில்  திணித்துள்ளது.  குறிப்பாக, 10ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தில் “ஜனநாயகம், பன்முகத்தன்மை” போன்ற பாடப் பிரிவுகளும், 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்தில் “கூட்டாட்சி, குடியுரிமை, மதச்சார்பின்மை” ஆகிய பாடப் பிரிவுகளும் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. அதேபோல் 9ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில்  தந்தை பெரியார் சிந்தனைகள், தமிழகப் பெண்களின் சிறப்புகளை விளக்கும் “மங்கையராய்ப் பிறப்பதற்கே’’ எனும்பாடமும் நீக்கப்பட்டு உள்ளன. மேலும் திருக்குறள், சிலப்பதிகாரம் குறித்த பாடங்களும், இந்திய தேசிய இராணுவத்தில் தமிழரின் பங்கு எனும் பகுதியும் அடியோடு நீக்கப்பட்டு உள்ளன.இந்திய வரலாற்றில் காவிகளின் சதிகளை வரலாறு நெடுகிலும் எதிர்த்த பாரம்பரியம் தமிழகத் திற்கு உண்டு. எனவே தமிழக வரலாற்றை அழிப்பது காவிகளின் மிகமுக்கியமான நிகழ்ச்சி நிரலாகவுள்ளது. இந்திய சமூகத்தின் பன்முகதன்மையை ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகளை கல்வித்துறையில் தொடர்ந்து எடுத்துவரும் மத்திய மனிதவள அமைச்சகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.பாடச்சுமையை குறைப்பது என்பது பாடங்களை அடியோடு நீக்குவதல்ல பாடத்தின் சாரம்சமும் உள்ளடக்கமும் குன்றாமல் தேவையானவற்றை மட்டும் வழங்குவதாகும். எனவே மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் இதனை உள்வாங்கிக் கொண்டு பாடங்களை வகுத்தளிக்க வேண்டும் எனக்கேட்டுக் கொள்கிறோம்.

;