tamilnadu

img

விடைத்தாள் திருத்தும் பணியை ஒத்திவைக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை

சென்னை:
11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பிடும் பணியை ஒத்தி வைக்க வேண்டுமென்று தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் வலியுறுத்திள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.சங் கர் வெளியிட்டுள்ள அறிக்கையின் சுருக்கம் வருமாறு:-

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஜூலை மாதம் நடத்துவதற்கு அட்டவணை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வு ஜூலை மாதத்தில் நடைபெற உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. கல்லூரி இளங்கலை படிப்புக்கான சேர்க்கை ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பரவல் அதிகரித்துக் கொண்டே செல்வதால், தேர்வு மதிப்பீட்டு மையத்திற்கு 80 விழுக்காடு ஆசிரியர்கள் வந்து செல்வதில் சிக்கல் உள்ளது. தேர்வு மதிப்பீட்டு மையத்திற்கு வந்து செல்ல ஒரு சுமூகமான மனநிலை இல்லாமல் விடைத்தாள் மதிப்பீடு செய்வது சரியாக அமையாது.மார்ச் 26ஆம் தேதி நடைபெற இருந்த 11ஆம் வகுப்பு தேர்வு வருகிற ஜூன் மாதம் 16ஆம் தேதியும், மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற 12 வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு எழுத முடியாத சுமார் 36 ஆயிரம் மாணவர்களுக்கு ஜூலை 18ம் தேதி நடக்க இருக்கிறது. அனைத்து தேர்வுகளும் முடிந்தபிறகு ஒரே சமயத்தில் தேர்வுத்தாள் மதிப்பீடு செய்வது
தான் சரியாக அமையும். எனவே, கால அவகாசம் அதிகமாக இருப்பதால் மதிப் பீடு பணியை, கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்து, பொதுப்போக்குவரத்து இயங்கும்போது விடைத் தாள் மதிப்பீடும் செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

;