tamilnadu

செப்.4 அன்று முதன்மை கல்வி அலுவலகங்கள் முன்பு இடைநிலை ஆசிரியர் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஆக. 24 - புதிய கல்விக்கொள்கை யை திரும்ப பெற வலியுறுத்தி செப்.4 அன்று மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு இடை நிலை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. இச்சங்கத்தின் மாநில பொதுக்குழு வெள்ளியன்று (ஆக.23) திண்டுக்கல்லில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் செ.அப்பாதுரை தலைமை தாங்கினார். பொதுச்செய லாளர் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், அரசு, அரசு உதவி பெறும் நகராட்சி, மாநகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியர்களாகa மாற்ற வேண்டும், இரண்டு ஆண்டு களாக நடத்தாத பதவி உயர்வு கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டும், 46 ஆரம்பப் பள்ளிகள் நூலகமாக மாற்றியதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.1 முதல் இயக்குநர், அமைச்சர், முதல்வர் ஆகியோருக்கு அஞ்சல் அனுப்புவது. அதனைத் தொடர்ந்து செப். 4 அன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவெடு க்கப்பட்டுள்ளது.  

;