tamilnadu

img

காவல்துறையினர் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள பயிற்சி... சைலேந்திரபாபு....

சென்னை:
காவல்துறையினர் மனிதாபிமானத்துடன்  நடந்து கொள்ள பயிற்சி அளிக்கப்படும் என்று சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைவராக  பதவிக் ஏற்றுக்கொண்ட சைலேந்திர பாபு கூறி உள்ளார்.தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. திரிபாதி புதன்கிழமை ஓய்வு பெற்ற நிலையில் புதிய டி.ஜி.பி.யாக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார். இதற் கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இதையடுத்து தமிழக காவல்துறையின் 30-வது சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக சைலேந்திர பாபு  பதவியேற்று கொண் டார். சென்னை மெரினாவில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் வைத்து அவர் பதவியேற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
காவல்துறையின் தலைமை பொறுப்பை வகிப் பது என்பது அரிய வாய்ப்பு. இந்த அரிய வாய்ப்பை வழங்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி. தமிழகத்தில் குற்றங்கள் நடக்கால் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பேணி காக்க முன்னுரிமை வழங்கப்படும். மக்களிடம் போலீசார் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அந்த வகையில், போலீசாருக்கு பயிற்சிகள் வழங்கப்படும் என்று சைலேந்திரபாபு கூறினார்.

;