tamilnadu

img

‘ஒரே நாடு ஒரே கார்டு’ திட்டத்தால் பாதிப்பு இல்லை: அமைச்சர் சொல்கிறார்

சென்னை:
மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத் தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.‘ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு’ திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர உள்ளது. இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த திட்டத்தை தமிழக அரசியல் கட்சிகளும், எதிர்த்து வருகின்றன. இந்த திட்டம் தொடர்பாக தில்லியில் மத்திய உணவுத் துறை அமைச்சர் தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் தமிழகம் சார்பில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டார்.தமிழகம் திரும்பிய அவர், இந்த திட்டத்தை செயல் பாட்டுக்கு கொண்டு வந்தால் தமிழகத்தில் பொதுவிநியோக திட்டத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது. ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசி, கோதுமை உள்ளிட்ட 
பொருட்கள் 3 மாதத்துக்கு கையிருப்பு உள்ளது. எனவே வெளி மாநிலத்தவர்களுக்கு இங்குள்ள ரேசன் கடைகளில் பொருட்கள் வழங்கினாலும் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் வராது.ஏனென்றால் மற்ற மாநிலத்தவர்களுக்கு கொடுக் கும் பொருட்களை மத்திய அரசு நமக்கு தந்து விடும். மத்திய அரசு தரும் பொருட் களையே ரேசன் கடைகளில் வினியோகம் செய்கிறோம்.இதனால் தமிழகத்தில் இலவச ரேசன் அரிசி வழங் கும் திட்டத்திலும் எந்த பாதிப்பும் ஏற்படாது. இதே போல் பொங்கலுக்கு வழங் கப்படும் இலவச வேட்டி-சேலை மற்றும் பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகத்திலும் எந்த தடங்கலும் ஏற்படாது என்றும் கூறியிருக்கிறார்.

;