tamilnadu

img

மக்களவைத் தேர்தல் 2024: தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு!

2024 மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதி களுக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என  17 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை தொகுதி களுக்கு வெள்ளியன்று முதல்கட்ட வாக்குபதிவு நடைபெற்றது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 2019 தேர்தலில் 72.44% வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 3% வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளன. 
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தருமபுரியில் 81.48% வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 53.91% வாக்குகளும் பதிவாகியுள்ளன. 

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட தமிழ்நாட்டின் வாக்குப்பதிவு சதவிகிதம்.


 

;