tamilnadu

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட 2,700 நபர்களின் வீடுகளில் நுழையத் தடை சென்னை மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது

சென்னை, மார்ச் 24- சென்னை, மார்ச். 24 கொரோனா வைர சால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 2,700 பேர் வீடுகளில்  உள்ளே மற்றவர்கள் நுழையக் கூடாது என்று சென்னை மாநகராட்சி சார்பில்  நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரசால் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் காஞ்சி புரம் பொறியாளர் குணம்டைந்துள்ள நிலை யில், மற்ற 9 பேரும் அரசு தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர் பில் இருந்தவர்கள், வெளிநாடு, வெளி மாநி லங்களில் இருந்து வந்தவர்கள் என தமிழ கம் முழுவதும் மொத்தம் 12,519 பேர் தொடர்ந்து 28 நாட்களுக்கு வீடுகளில் தனி மைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதில் சென்னையில் மட்டும் 3,682 பேர்  கண்காணிப்பில் உள்ளனர். புதிதாக உரு வாக்கப்பட்ட செயலி மூலம் அவர்களுடன் மருத்துவக் குழுவினர் வீடியோ அழைப்பில்  தொடர்பு கொண்டு, உடல் நிலை குறித்து  அறிந்து வருகின்றனர். தேவையானவர்க ளுக்கு ரத்தமாதிரி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே வீட்டுக் கண்காணிப்பில் இருப்பவர்கள் கட்டுப்பாட்டை மீறி வெளியே சென்று வருவ தாகவும், மற்றவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து வீட்டில் உள்ளவர்கள் சுய  தனிமைப்படுத்தலுக்கான அரசின் கடுமை யான உத்தரவை மீறினால் சட்டப்படி நடவ டிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இந்நிலையில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளவர்களின் வீடுகளை அடையாளப்ப டுத்தும் விதமாக வீட்டின் முகப்பில் நோட்டீஸ்  ஒட்ட முடிவு செய்யப்பட்டது. சென்னையில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளவர்களின் வீடு களில் மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் ஒட்டப் பட்டு வருகிறது. மருத்துவக் குழுவினர் சம்பந்  தப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று தனிமைப்படுத்தப்பட்டவர்களின் உடல் நிலையை பரிசோதனை செய்கின்றனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்ப தற்கான வழிமுறைகள் குறித்து விளக்கு கின்றனர். பொது வெளியில் சென்று யாருட னும் பழகாமல், தொடர்ந்து 2 நாட்கள் தனிமை யில் இருக்குமாறு அறிவுரை வழங்கி நோட்டிசை ஒட்டுகின்றனர். அந்த நோட்டீசில் கொரோனா தொற்று  உள்ளே நுழையக் கூடாது, தனிமைப்ப டுத்தப்பட்ட வீடு என்பதுடன் பெயர் எந்த  நாளில் இருந்து எந்த நாள் வரை தனிமைப்ப டுத்தப்பட்டுள்ளார் ஆகிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

;