tamilnadu

img

உயர்நீதிமன்றத்தில் செப். 7 முதல் நேரடி விசாரணை

சென்னை:
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட சென்னை உயர் நீதிமன்றம், 160 நாட்களுக்குப் பின் சோதனை முறையில் நீதிமன்ற அறையில் வழக்குகள் விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி தலைமையிலான நிர்வாக குழு கூட்டத்துக்கு பின்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, கடந்த மார்ச் மாதத்தில் சென்னை உயர் நீதிமன்றம் மூடப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் தங்கள் இல்லங்களில் இருந்தபடியே காணொலி காட்சி மூலமாக அவசர மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை மட்டுமே விசாரித்து வந்தனர்.பின்னர், பார் கவுன்சில் மற்றும்  வழக்குரைஞர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று நீதிமன்ற அறையில் இருந்து காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரித்த நிலையில், சில நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், நீதிமன்றத்தில் அமர்ந்து வழக்குகளை விசாரிக்கும் நடைமுறை முழுமையாக தவிர்க் கப்பட்டது.கடந்த 5 மாதங்களாக மூடப் பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தில், 160 நாட்களுக்குப் பிறகு நீதிமன்ற அறைகளில் இருந்து வரும் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் சோதனை அடிப்படையில் வழக்குகள் விசாரிக்கப்படும் என, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில் நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதற்கட்டமாக சோதனை முறையில் இரண்டு வாரங்கள் நீதிமன்ற அறையில் இருந்து நீதிபதிகள் வழக்குகளை விசாரணை செய்யும்முறை அமல்படுத்தப்படும் எனவும், அதில் காலையில் 3 அமர்வுகளும், மாலையில் 3 அமர்வுகளும் அடங்கிய நீதிபதிகள் வழக்குகளை விசாரிப்பார்கள் என அந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

;