tamilnadu

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை, அக்.4- சென்னையிலுள்ள 2 அரசு அலுவ லகங்கள் உள்பட, தமிழகத்தில் 5 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத 7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. பண்டிகை காலங்களில் அரசு அலுவலகங்களில் விதிகளை மீறி  அதிகாரிகளுக்கு, பணம், பரிசுப்  பொருட்கள் வழங்குவது தொடர்ந்து  நடைபெற்று வருவதாக புகார்கள் உள்ளன. இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை யினர் 5 அரசு அலுவலகங்களில் சோதனை நடத்தினர். சென்னை வடக்கு சரக இணை போக்குவரத்து ஆணையர் அலுவல கம் அண்ணா நகர் நியூ ஆவடி சாலையில் உள்ளது. டி.எஸ்.பி. சங்கர் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் உட்பட 10 லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் அங்கு சோதனை நடத்தினர். சில இடைத்தரகர்களையும் பிடித்து விசாரணை மேற்கொண்ட னர். இதில் கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 26 ஆயிரம் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.  இதேபோல, சென்னை புளி யந்தோப்பு துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ. 3 லட்சத்து 95 ஆயிரம் கைப் பற்றப்பட்டது. விழுப்புரம், கரூர், திண்டுக்கல் என மொத்தம் 5 இடங்களில் அரசு  அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 7  லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கைப்  பற்றப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

;