tamilnadu

img

டிஎன்பிஎஸ்சி தேர்வு புதிய அட்டவணை வெளியீடு குரூப்-2 நேர்முகத் தேர்வு ரத்து

 அரசுப் பணியாளர்  தேர்வாணையம் (TNPSC) அரசுத்  துறைகளில் காலியாக இருக்கும்  பணியிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அறிவிப்புகளை வெளி யிட்டு, தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் 2024 ஆம்  ஆண்டுக்கான ஆண்டு அட்ட வணையை ஏற்கெனவே வெளி யிட்டிருந்தது.

இந்நிலையில், திருத் தப்பட்ட புதிய அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, 90 பணி யிடங்களைக் கொண்ட குரூப்  1-க்கான முதல்நிலை தேர்வு ஜூலை 13-ஆம் தேதியும், 29 பணி யிடங்களுக்கான குரூப் 1-பி மற்  றும் குரூப் 1-சி தேர்வுகள் ஜூலை 12-ஆம் தேதியும், 6 ஆயிரத்து  244 பணியிடங்களுக்கான குரூப்-4  தேர்வு ஜூன் 9-ஆம் தேதியும் நடை பெறும் என்று அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

6 ஆயிரத்து 244 இடங்களுக்  கான குரூப்-4 தேர்வில், 108 கிராம  நிர்வாக அலுவலர் பணியிடங்க ளும், 2,442 இளநிலை உதவியா ளர் பணியிடங்களும், சுமார் 1,700 தட்டச்சர் பணியிடங்களும் உள்ளன. குரூப் 2, 2ஏ தேர்வுகள் செப்டம்  பர் 28 அன்று நடைபெற உள்ள தாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏஎஸ்ஓ, முனிசிபல் நிர் வாகம் உள்பட தற்போது குரூப் 2-ஏவில் இருந்த பணியிடங்கள் மீண்டும் குரூப் 2 பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. குரூப்-2, 2ஏ காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையும் 1,264லிலிருந்து  தற்போது 2 ஆயிரத்து 30 ஆக  உயர்த்தப்பட்டுள்ளது.  இதுதவிர, தேர்வு நடைமுறை யும் மாற்றப்பட்டுள்ளது. குரூப்-2 பதவிகளுக்கு இதுவரை நேர் முகத் தேர்வு நடத்தப்பட்டு வந்த  நிலையில், தற்போது இது மாற் றப்பட்டுள்ளது. இனி குரூப்-2 பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது.  

புதிய அட்டவணையை தேர்  வர்கள் https://www.tnpsc. gov.in/ என்ற இணையதளத் திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

;