tamilnadu

img

20 கிராமங்களுக்கான சாலையை தடுக்கும் வனத்துறை கவலைப்படாத வருவாய்த்துறை: மக்கள் ஆவேசம்

கள்ளக்குறிச்சி, ஆக. 28- விழுப்புரம் மாவட்டம் கள்ளக்  குறிச்சி வட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தக் கூடிய சாலையில் 400 மீட்டர் சாலை போட வனத்துறை தடுப்பதால் வனத்துறை அனுமதி கோரி 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுநாகலூர் முதல் நின்னையூர் கூட்டுச் சாலை வரை குண்டும், குழியு மாக சேதமடைந்துள்ள சாலையை நபார்டு திட்டத்தின் மூலம் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு குறிப்  பிட்ட தூரம் சாலை அமைக்கப்பட்டது. இடையில் சுமார் 400 மீட்டர் தூரம்  வனத்துறை இடம் வருகிறது. இந்த  இடத்தில் சாலை அமைக்கக் கூடாது என விழுப்புரம் மாவட்ட வனத்  துறை அலுவலர் தடுத்து வருகிறார். இதனால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அரசு அலுவலகங்களுக்கும், மருத்துவமனை, வங்கி, பள்ளி, கல்லூரி செல்வதற்கும், பிற ஊர் களுக்கு செல்வதற்கு பேருந்துகள் ஏறுவதற்கும் மையப்பகுதி ஊரான  கூத்தக்குடி செல்வதற்கு இயல வில்லை. கர்ப்பிணிகளை பிரசவத் திற்கு அழைத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் கூட கிராமங்களுக்கு வர மறுக்கக் கூடிய நிலையில் சாலை கள் சேதமடைந்துள்ளன.  பல ஆண்டுகளாக இந்த நிலை  நீடித்து வருகிறது.

 எனவே சிறுநாக லூர் முதல் நின்னையூர் கூட்டுசாலை வரை உள்ள சாலையின் இடையே  400 மீட்டர் தூரமும், வாணியந்தாங்கல் முதல் கூத்தக்குடிவரை உள்ள சாலையின் நடுவே 200 மீட்டர் தூரத்திற்கும் சாலை அமைப்பதற்கு வனத்துறை அனுமதி அளிக்க வேண்டும்,  இதற்கான முறையான அனுமதி கோரி வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற  கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சார்பில் 20 கிராம பொதுமக்களை  திரட்டி 28 ஆம் தேதி புதன்கிழமை யன்று செம்பியன்மாதேவி கிராமத் தில் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்திட 500-க்கும் மேற்பட்டோர் ஆவேச முழக்கங்கள் எழுப்பியபடி ஊர்வல மாக வந்தனர். அப்போது அங்கே பாதுகாப்புக் காக வந்திருந்த துணை காவல்  கண்காணிப்பாளர்கள் கள்ளக்  குறிச்சி ராமநாதன், உளுந்தூர் பேட்டை பாலச்சந்தர், 3 காவல் ஆய்  வாளர்கள் உள்ளிட்ட காவல்துறை யினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்தவர்களை பேரி கார்டு மற்றும் கயிறு கட்டி தடுத்தனர்.

இதன்பின் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் வேல்முருகன், காவல்  துறை அதிகாரிகள், தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலர் ஆகி யோருடன் நடைபெற்ற பேச்சு வார்த்  தையில் உடனடியாக இப்பிரச்ச னையை தீர்க்க நடவடிக்கை எடுப் பது என உடன்பாடு ஏற்பட்டது. இதன்  பின் அதிகாரிகளும் தலைவர்களும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளா கத்தில் உள்ள வனத்துறை உயர் அதிகாரியின் அழைப்பின் பெயரில் பேச்சுவார்த்தை நடத்திட சென்றனர். இதையடுத்து போராட்டத்திற்காக வந்தவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் போராட் டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கள்ளக்குறிச்சி வட்டச் செயலாளர் பி.மணி தலைமை தாங்கி னார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பி னருமான பி.டில்லிபாபு, விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி. ஏழுமலை, செயற்குழு உறுப்பினர் கள் டி.எம்.ஜெய்சங்கர், பி.சுப்பிர மணியன், ஏ.வி.ஸ்டாலின்மணி, மாவட்டக்குழு உறுப்பினர் அ.பா. பெரியசாமி உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

;