tamilnadu

ரூ.200 கோடி மோசடி வழக்கில் நிதி நிறுவன உரிமையாளருக்கு சிறை....

சென்னை:
கடன் பத்திரம் வாயிலாக 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், மும்பை நிதி நிறுவன அதிபரை, பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்தவர் ரவி பார்த்தசாரதி, 69; நிதி நிறுவன அதிபர். இவர் அங்கு, ஐ.டி.என்.எல்., என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.இவர், சென்னை அண்ணா சாலையில் செயல்படும், மூன்ஸ் டெக்னாலஜி லிமிடெட் என்ற நிறுவனத்திடம், கடன் பத்திரம் பெற்று 200 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார்.இதுகுறித்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். மோசடி நடந்து இருப்பது உண்மை என தெரிய வந்தது.இதையடுத்து சில மாதங்களுக்கு முன், ரவி பார்த்தசாரதியின் கூட்டாளிகள், அரி சங்கரன், ராம்சந்த் கருணாகரன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட ரவி பார்த்தசாரதி, முன் ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய் தார். அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இதையடுத்து, மும்பையில் பதுங்கி இருந்த ரவி பார்த்தசாரதியை, பொருளாதார குற்றப் பிரிவு போலீசார்  கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.

மேலும், அவரது நிறுவனத் தில் முதலீடு செய்து பாதிக்கப் பட்டவர்கள், டி.எஸ்.பி., பிரகாஷ்பாபு என்பவரின் 95511 33229, 94981 09600 என்ற மொபைல் போன் எண்கள் வழியாகவும், dsp3eow@gmail.com என்ற மின்னஞ்சலிலும் புகார் அளிக்கலாம் என, போலீசார் அறிவித்துள்ளனர்.

;