tamilnadu

img

சொந்த ஊர் திரும்ப ஆசிரியர்-மாணவர்களுக்கு உத்தரவு

சென்னை:
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ஜூன் ஒன்றாம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறு கிறது. இந்த தேர்வை எழுதவுள்ள மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அலுவலர்கள் ஆலோசனை வழங்கினர்.

அதன்படி, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர் வில் மாணவர்கள் படித்த பள்ளியையே ஒரு மையமாக அமைத்து தேர்வெழுத உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மெட்ரிக் பள்ளிகளிலும், இதுவரை அங்கீகாரம் பெறாத பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்கள் மட்டுமே ஏற்கனவே தேர்வு மையமாக அமைக்கப் பட்டுள்ள பள்ளியில் தேர்வு எழுத வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.பள்ளியில் ஒரு வகுப்பறையில் 10 மாணவர்கள் மட்டுமே அமர வைக்க வேண்டும். பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் முதுநிலை ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிக்குச் சென்றால் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது.

ஏற்கனவே பள்ளிக்கல்வித் துறையில் 10 ஆம் வகுப்பிற்கு 3000 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டி ருந்தன. தற்போது அந்த கணக்கில், மையங்கள் மாநிலம் முழுவதும் மாணவர்கள் படிக்கும் 12 ஆயிரம் பள்ளிகளில் அமைக்கப்படவுள்ளன. இதனால் 12 ஆயிரம் பள்ளிகளில் தேர்வு மையங்களாக மாற்றப்படுகின்றன.பள்ளிகளில் பணிபுரிவதற்கு பட்டதாரி ஆசிரியர்கள் போதுமான அளவில் இல்லாவிட்டால், அரசுப் பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களும், தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களையும் பயன்படுத்திக் கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள் ளது.

கொரோனா நோய்க் கிருமித் தொற்றினால் பாதிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு அருகிலேயே தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும். மேலும் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட பகுதியிலுள்ள மாணவர்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் இருந்தால், சிறப்பு மையங்கள் உருவாக்க வேண்டும்.சிறப்பு மையங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, முழு உடல் பாதுகாப்பு கவசம், முகக் கவசம் போன்றவையும் வழங்க வேண்டும்.பள்ளியில் தேர்வு எழுதும் மாணவர் ஒரு சில தேர்வுகள் எழுதிய பின்னர், அவர் வசித்த பகுதியில் யாருக்காவது கொரோனா நோய்க் கிருமித் தொற்று ஏற்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்தால், அந்த மாணவரும் சிறப்பு தேர்வு மையத்திலேயே தேர்வெழுத வேண்டும்.ஆசிரியர்கள் மற்றும் தேர்வு எழுதும் மாணவர்கள் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு சென்றிருந்தால் தமிழ்நாடு அரசின் இ-பாஸ் மூலம் பணிபுரியும் பள்ளிக்கு திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளிகளில் உள்ள மேசை, நாற்காலிகளை முழுமையாக சுத்தம் செய்து கிருமி, நாசினி தெளித்து பாதுகாப்பாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது.

;