tamilnadu

img

கொரோனா தொற்று குறைந்தது... தினசரி பாதிப்பு 70,421 ஆக சரிவு....

சென்னை:
இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று கடந்த 72 நாட்களுக்கு பிறகு 70,421 குறைந்துள்ளது. சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 10 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

கொரோனா 2 ஆவது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும்  அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,421 ஆக குறைந்துள்ளது. கடந்த 24 மணி கொரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன்படி, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,95,10,410. கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,421. இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,81,62,947.  கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,19,501. கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3921. சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 9,73,158. இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் எண்ணிக்கை 25,48,49,301. இவ்வாறு ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

;