tamilnadu

img

மூடப்பட்ட தொழிற்சாலையை திறக்க சிஐடியு வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி, ஜூலை 3- கிருஷ்ணகிரி ஓசூர் வட்டம் மத்திகிரி தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள ஓசூர்  கேபில்ஸ் அண்டு வயர்ஸ் பிரைவேட் லிமி டெட் என்ற தொழிற்சாலையில் கடந்த 10 ஆண்டுகளாக 30 பெண் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இங்கு கேபில்,  வயர், காயில் உட்பட டிவிஎஸ் தொழிற்  சாலைக்கு தேவையான உதிரிபாகங்கள் ஒப்பந்த அடிப்படையில் செய்யப்படுகின்றன. இங்கு வேலை செய்யும் பெண் தொழி லாளர்கள் மத்திகிரி, இடயநல்லூர், பேல  கொண்டப் பள்ளி பகுதிகளில் வசிக்கின்றனர்.  இவர்கள் 80 ரூபாய் தினக்கூலியில் பணிக்கு சேர்ந்த நிலையில்  10 ஆண்டுகள் கடந்து 180 ரூபாய் தினக்கூகூலி வழங்கப்படுகிறது. இந்த தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ, பிஎப் போன்ற எந்த  சலுகையும் கிடையாது. தேசிய  விடுமுறை நாட்களுக்குக் கூட கூலி கொடுக்  கப்படுவதில்லை. சட்டப்பேரவை, மக்க ளவை தேர்தல்களுக்கு கூட விடுமுறை அளிக்கப்படவில்லை. தேர்தலன்று வேலைக்கு செல்லாதவர்களுக்கு கூலி  பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல்  மே தினத்திற்கும் கூலி வழங்கப்படுவதில்லை. தொழிற்சாலை இருப்பிடம் பேல கொண்டப்பள்ளி என்றுள்ளது, ஆனால் மத்தி கிரியில் நிறுவனம் இயங்கி வருகிறது. தினசரி  தொழிலாளர்களே நிறுவனத்தை திறந்து பணி செய்து விட்டு மாலை பூட்டிவிட்டு சாவியை எடுத்துச் செல்வார்கள். பலமுறை பெண் தொழிலாளர்கள் கூலி உயர்வு, பிஎப்,  இஎஸ்ஐ கேட்டுள்ளனர். ஆனால் கேட்ப வர்களை வேலையிலிருந்து நீக்கி விடுகிறது நிர்வாகம். இதனால் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனருக்கு இதுகுறித்து சிஐடியு  சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் தொழிற்சாலை ஆய்வாளர்கள் வந்து  ஆய்வு செய்தனர். திடீரென புதன்கிழமை (ஜூலை 3) காலை  வேலைக்கு பெண் தொழிலாளர்கள் சென்ற  போது தொழிற்சாலைக்கு புதிதாக பூட்டு  போடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி யடைந்தனர். மேலும் உரிமையாளர்ககன பேலகொண்டப்பள்ளி ரமேஷ், அவரது மனைவி  பிந்து ஆகியோர் தொழிற்சாலைக்கு வர வில்லை. அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதனால் பணிக்கு வந்த  பெண்கள் என்ன செய்வதென்று தெரியாமல்  வீதியில் அமர்ந்திருந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த சிஐடியு மாவட்டப் பொருளாளர் பீட்டர், துணைத் தலை வர் வாசுதேவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் பிஜி.மூர்த்தி ஆகி யோர் இதுகுறித்து மத்திகிரி காவல் நிலை யத்தில் புகார் அளித்தனர். மேலும் தொழிற்சாலை திறக்கும் வரை பெண்கள் அங்கேயே அமர்ந்து போராடுவார்கள் என்றும் தெரிவித்தனர்.

;