tamilnadu

img

சத்யம் தொலைக்காட்சி மீது தாக்குதல்... டியூஜெ கடும் கண்டனம்..

சென்னை:
சத்யம் தொலைக்காட்சி மீது, நடத் தப்பட்ட கொடூரத் தாக்குதலுக்கு, கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் (டியூஜெ), பத்திரிகை மற்றும் ஊடகங்களை பாதுகாக்க வரும் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே “பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு” சட்ட மசோதாவை அறிமுகம் செய்து, நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து, சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

செவ்வாய்க்கிழமை(ஆக.3) இரவு 7 மணிக்கு சென்னை ராயபுரத்தில்உள்ள சத்யம் தொலைக் காட்சி அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் நீண்ட பட்டாகத்தியுடன் அலுவலகத்தையே அடித்து நொறுக்கி, சூறையாடியதுடன், அங்கு இருந்த ஊடகவிலாளர்கள், நிர்வாகிகள், ஊழியர்களை, கொலை செய்து விடுவதாக, தாக்கமுயன்றபோது அனைவரும் ஓடி ஒளிந்து உயிர் தப்பியுள்ளனர். அதில் ஒரு ஊழியர் காயமடைந் துள்ளார்.இந்த தாக்குதல் குறித்து அலுவலகத்தில் இருந்த, சி.சி.டி.வியில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை பார்க்கும் போது, மனம் பதறுகிறது. சினிமாவில் காணும் காட்சிகளை விட கொடூரமாகநீண்ட பட்டாகத்தி, கேடயத்துடன், பொருட்களை அடித்து நொறுக்கி கொலை மிரட்டல் விடுவது அச்சத்தை ஏற்படுத்துகிறது.

மாநிலத்தின் தலைநகர் சென்னையில் நடந்துள்ள இந்த கொடூர தாக்குதலுக்கு டியூஜெ கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. இந்த சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட தனிநபர் மட்டுமே காரணமாக இருக்க முடியாது.இதன் பின்னணியில், ஒரு அமைப்போ, குழுவோ, இருக்கவேண்டும். இந்த சம்பவத்தின் உண்மை பின்னணியை தீர விசாரித்து காரணமானவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலினை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.கருத்துரிமை, உண்மைகளை ஒளிபரப்பும்,ஊடக உரிமைகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கு அஞ்சாமல் நிற்போம்! என்கிற சத்யம் தொலைக்காட்சியின், உறுதியை தமிழக பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் சார்பில் டியூஜெ பாராட்டு தெரிவிப்பதுடன், சத்யம் தொலைக்காட்சிக்கு ஆதரவாக என்றென்றும் துணை நிற்கும் என்று உறுதியளிக்கிறது.மேலும், பத்திரிகை, ஊடகங் களை பாதுகாக்கவும், பத்திரிகை- ஊடகவியலாளர்களின், உயிர், உடமைகளை பாதுகாக்கவும், நடப்பு, பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே, பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு மசோதாவை அறிமுகம் செய்து, சட்டமாக்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக முதலமைச் சரை அனைத்து, பத்திரிகையாளர் கள் சங்கங்கள்,அமைப்புகள் சார்பில் டியூஜெ கேட்டுக்கொள்கிறது.இவ்வாறு தெரிவித்துள்ளார்.சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதி தமிழன்,சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் வி. அன்பழகன், சென்னை நிருபர்கள் சங்கத் தலைவர் ஆர். ரங்கராஜ், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

;