tamilnadu

img

சென்னை விமான நிலையத்தில் ரூ.78 லட்சம் தங்க காகிதங்கள் பறிமுதல்

சென்னை:
துபாய் நாட்டில் இருந்து சென்னை வந்த சிறப்பு விமானத்தில் அட்டை பெட்டியில் ரூ.78 லட்சம் மதிப்புடைய 1.5 கிலோ தங்க காகிதங்கள் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கொரோனா ஊரடங்கால் துபாயில் சிக்கி தவித்த இந்தியர்களை ‘வந்தே பாரத்’ என்ற மத்திய அரசின் திட்டத்தின் மூலம் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சிறப்பு விமானம் ஒன்று அழைத்து கொண்டு சென்னை மீனம் பாக்கம் விமான நிலையத்திற்கு வந்து இறங்கியது. விமானத்தில் வந்தவர்களுக்கு மருத்துவம், குடியுரிமை சோதனைகள் முடிந்து வெளியே வந்தபோது, விமானத்தில் வந்திறங்கிய கள்ளக்குறிச்சி மாவட் டத்தை சேர்ந்த 35 வயது மதிக் கத்தக்கவரின் உடைமைகள் வந்திருந்தது. இதை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் மற்றும் படுக்கை விரிப்புகள் கொண்ட அட்டை பெட்டி இருந்தன.அவற்றை பிரித்து பார்த்தபோது, அதில் தங்கத்தை காகிதங்களாக மாற்றி யாரும் கண்டுபிடிக்காமல் இருக்க கார்பன் பேப்பருடன் சுற்றி படுக்கை விரிப்புகளில் மறைத்து கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.இதையடுத்து, சுமார் ரூ.78 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 450 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப் பற்றினார்கள். இது தொடர்பாக தனிமைப்படுத்தல் முகாமில் உள்ள கள்ளக்குறிச்சி வாலிபரை கைது செய்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;