tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 6,426 பேருக்கு கொரோனா தொற்று....  5,927 பேர் குணமடைந்தனர்...

சென்னை 
தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் நாளுக்குநாள் உச்சமடைந்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒருவார காலமாக தினசரி பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 6,426 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,34,114 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 82 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,741 ஆக அதிகரித்துள்ளது. இன்று (புதன்) ஒரே நாளில் 5,927 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், மொத்தமாக இதுவரை 1,72,883 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இன்னும் சிகிச்சையில் 57,490 பேர் உள்ளனர். 

;