tamilnadu

img

கொரோனா பரவல் தடுப்புப் பணிக்கு மேலும் ரூ.5000 கோடி தேவை.... ரங்கராஜன் குழு

சென்னை:
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணிக்காக மேலும் ரூ.5,000 கோடிக்கு சுகாதாரத் துறைக்கு செலவு செய்யவேண்டும் என்று ரங்கராஜன் குழு, அரசுக்கு பரிந்துரை செய்துள் ளது.கொரோனா நோய் தொற்று பரவியதை தொடர்ந்து தமிழ் நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் பொருளாதாரத்தில் கடும் முடக் கம் ஏற்பட்டது.

குறிப்பாக வேளாண்மை, தொழில், சேவை துறைகளான சுற்றுலா, கட்டுமானம், ரியல் எஸ்டேட், சில்லரை வர்த்தகம் ஆகியவற்றில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன.இதையடுத்து தமிழக பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், பொருளாதார வளர்ச்சியை மேம் படுத்தவும் பல்வேறு துறை வல்லுனர்கள் கொண்ட நிபுணர் குழு உருவாக்கப்பட்டது.இந்த நிபுணர் குழு தலைவராக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரும், சென்னை பொருளியல் பள்ளி தலைவருமான சி.ரங்கராஜன் செயல்பட்டார்.இந்த குழுவில் முன்னாள் தலைமை செயலாளர் என்.நாராயணன், சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பி.துரைசாமி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் என்.குமார், சென்னை பொருளியல் பள்ளியின் இயக்குநர் கே.ஆர்.சண் முகம், சென்னை மேம்பாட்டு கல்விக் கழகத்தின் இயக்குநர் பி.ஜி.பாபு, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் என்.சீனிவாசன், டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன், இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் பத்மஜா சந்துரு, ஈக்வடாஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் பி.என்.வாசுதேவன், 14-வது நிதிக்குழுவின் உறுப்பினர் எம்.கோவிந்தராவ், சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் எம்.சுரேஷ்பாபு, யூனிசெப் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பினாகி சக்ரவர்த்தி ஆகியோரு டன், குழுவின் ஒருங்கிணைப்பாளராக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் செயல்பட்டு வந்தார்.

இந்த நிபுணர் குழு சென்னையில் பல தடவை கூடி ஆய்வுகளை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் தமிழக அரசுக்கு பல்வேறு பரிந்துரைகள் கொண்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.இந்த நிலையில்,  நிபுணர் குழுவினர் ரங்கராஜன் தலைமையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமை செயலகத்தில் சந்தித்தனர். அப்போது பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய ஆய்வு அறிக்கையை அவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்ப்பித்தனர்.அதன்பிறகு நிபுணர் குழு தலைவர் சி.ரங்கராஜன் வெளியில் வந்ததும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டுள் ளது. அந்த சரிவை சீரமைப்பு செய்யும் வகையில் பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு நாங்கள் அளித்துள்ளோம்.2020-21ஆம் நிதியாண்டில் தமிழக பொருளாதார வளர்ச்சி 1.77 சதவீதமாக இருக்கும். நகர் பகுதிகளில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க நாங்கள் பரிந்துரைத் துள்ளோம். சுகாதாரத்துறைக்கு ரூ. 5 ஆயிரம் கோடி செலவிட பரிந்துரை செய்திருக்கிறோம்.மேலும் இலவச அரிசி வழங்குவதை நவம்பர் மாதம் வரை நீட்டிக்க கூறியிருக்கிறோம். குறுகிய கால, நீண்ட கால பரிந்துரைகள் அதிகம் இடம் பெற்றுள்ளது. எனவே தமிழகத்தில் பொருளாதார மந்தநிலை இன்னும் 2 மாதங் களில் மாறி விடும்.இவ்வாறு நிபுணர் குழு தலைவர் சி.ரங்கராஜன் தெரிவித்தார்.

;