tamilnadu

குடிநீர் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ள திருப்புவனம், மானாமதுரை

சிவகங்கை:
கடும் வறட்சி காரணமாக மானாமதுரை, திருப்புவனம் பகுதியில் வைகையாற்றுக்குள் செயல்பட்டு வரும் குடிநீர் திட்டங்களில் நீராதாரம் குறைந் துள்ளதால் குடிநீர் திட்டங்களை காப்பாற்ற வைகையாற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் எனகோரிக்கை எழுந்துள்ளது. 

மதுரை மாவட்டம் விரகனூர் மதகு அணையிலிருந்து இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் மதகு அணை வரை 50 கி.மீதூரமுள்ள மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளை கடந்துசெல்லும் வைகையாற்றுக்குள் பிரதான மற்றும் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் என 80 க்கும் மேற் பட்ட திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. மதுரை, திருப்புவனம், சிவகங்கை, மானாமதுரை ஆகிய முக்கிய ஊர்களுக்கான குடிநீர்திட்டங்களும் இதுதவிர விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்களுக்கான குடிநீர் திட்டங்களும் செயல்பட்டு வருகின்றன. குடிநீர் திட்டங்கள் அருகே நடக்கும்மணல் கொள்ளை, மழை இல்லாமல் நிலத்தடி நீராதாரம் குறைந்துபோனது போன்ற காரணங்களால் மேற்கண்ட குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்பட்டு தற்போது மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளுக்கான வைகையில் செயல்படும் குடிநீர் திட்டங்களில் குடிநீர் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பணம் கொடுத்து குடிநீரை வாங்கிப்பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

உள்ளாட்சி நிர்வாகங்கள் பாதிக்கப்பட்ட குடிநீர் திட்டங் களை மீண்டும் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொண்டாலும் பலன் கிடைக்காத நிலையில் இப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு என்பது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாகஉள்ளது. எனவே வைகையாற் றில் செயல்படும் குடிநீர் திட்டங்களை காப்பாற்ற வைகையாற் றில் தண்ணீர் திறக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

;