tamilnadu

img

மருத்துவர்களுக்கு உதவ ஸ்வாப் டெஸ்ட் செய்யும் ரோபோ – கோவை இளைஞரின் முயற்சி

கோவை, ஜூன் 27 - ரோபோ மூலம் ஸ்வாப் டெஸ்ட் செய்யும் கருவியை கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கண்டு பிடித்துள்ளார்.   கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ லில் இந்நோய்த் தொற்றைத் தடுக்க அரசுத்துறை போராடி வருகின்றது. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் களுக்கும், செவிலியர்களுக்கும் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற் பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மக்களிடம் இருந்து சளி மாதிரிகளை எடுக்கும் ஸ்வாப் டெஸ்ட் செய்ய ரோபோ ஒன்றை கோவையைச் சேர்ந்த இளைஞர் உரு வாக்கியுள்ளார்.  இதுகுறித்து, கோவை பத்திரிக் கையாளர் மன்றத்தில் சனியன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அந்த ரோபோவை உருவாக்கிய கார்த்தி வேலாயுதம் என்ற இளைஞர் கூறுகையில்,  இந்த ரோபோக்களை  பயன்படுத்துவதன் மூலமாக சளி  மாதிரிகளை சேகரிக்க கைகளை உபயோக்கிக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த ரோபோவே மாதி ரிகளை சேகரிக்கும்.  

இந்த ரோபோவை வெறும் ரூ.2 ஆயிரம் ரூபாய் மதிப்பில் உருவாக்கியுள் ளேன். முழு ரோபாவாக உருவாக்கு வதற்கு அரசு அங்கீகரித்தால் இதனை  அனைத்து மருத்துவமனைகளுக்கும் தயாரித்து வழங்க முடிவு செய்துள் ளேன்.  இந்த ரோபோவில் ஒரு மொபைல் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல், மாதிரிகளை சேகரிக்க  வரும் மக்கள் எப்படி அமர வேண்டும் உள்ளிட்ட பல அறிவுறுத்தல்களை கொடுக்கும். இந்த மொபைல் மூலம் வீடியோ கால் வாயிலாக மாதிரி எடுப் பவரிடம் பேச முடியும். மேலும் ஒருவரி டம் இருந்து மாதிரி எடுக்க 2 நிமிடம் மட்டுமே தேவைப்படும். ஒரு வருக்கு மாதிரி சேகரிக்கப்பட்ட பிறகு மற்றொருவருக்கு பாதுகாப்பாகப் பரி சோதனை செய்யும் விதமாக கிருமி நாசினி தெளிக்கப்படும். 360 டிகிரி முறையில் இந்த இயந்திரத்தை கட்டு படுத்த முடியும். இதற்கு கோவிட்-19 ஸ்மார்ட் ஸ்வாப் என பெயரிட்டுள் ளேன்.  இவ்வாறு அவர் தெரிவித் தார்.

;