tamilnadu

img

சிபிஎம் எம்.பிகள் தலையிட்டால்  ஜக்கி வாசுதேவின் யோகி படம் நீக்கம்

கோவை மாவட்ட அரசு இணையதளத்தில் கோவையின் அடையாளமாக ஜக்கி வாசுதேவின் யோகி படங்கள் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன்  கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜனிடம் கோவை மாவட்ட இணைய தளத்தில் இருந்து ஜக்கி குறித்த படங்களை நீக்குமாறு வலியுறுத்தினார்.  விஞ்ஞானி ஜி.டி நாயுடு, 150 ஆண்டு பழமை வாய்ந்த அரசுமருத்துவமனை, கோவை வனக்கல்லூரி, வேளாண் கல்லூரி உள்ளிட்ட ஆயிரமாயிரம் விஷயங்கள் இருக்கும்  போது ஏன் ஆர்எஸ்எஸ்ஐ உயர்த்தி பிடிக்கும் ஜக்கி வாசுதேவின் யோகா மையத்தை கோவையின் அடையாளமாக மாற்ற வேண்டும் என்று வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பினார்.  மேலும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி. ஆர் நடராஜன் இது கோவை மக்களை அவமதிக்கும் செயல் என்று கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதையடுத்து அந்த படங்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பவதாது
கோவை மாவட்ட இணையதளத்தில் இருந்த ஜக்கிவாசுதேவின் யோகி படங்களை நீக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினேன். அது தற்போது மாற்றப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியருக்கு எனது நன்றி! இவ்வாறு தெரிவித்துள்ளார்.

;