tamilnadu

img

மக்களை வதைக்கும் சொத்துவரி உயர்விற்கு எதிராக அணிதிரள்வீர் நன்றி அறிவிப்பு பிரச்சாரத்தில் பி.ஆர்.நடராஜன் எம்.பி. அழைப்பு

கோவை, அக்.3- அநியாய சொத்துவரி உயர்வு, அந்நிய நாட்டி டம் கோவை மாநகரத்தின் குடிநீர் விநியோகம் ஆகிய வற்றிற்கு எதிராக அக்.10 ஆம் தேதியன்று நடை பெறும் போராட்டத்திற்கு அணிதிரண்டு வர வேண் டும் என சிங்கை சட்ட மன்ற தொகுதியில் நடை பெற்ற நன்றி அறிவிப்பு  பிரச்சாரத்தில் பி.ஆர்.நட ராஜன் எம்.பி. மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்ட ணியின் சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பி.ஆர்.நடராஜன் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதனை யடுத்து சிங்காநல்லூர் சட்டமன்ற தொகு திக்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் பகுதியில் துவங்கிய பிரச்சார இயக்கம், ஸ்ரீபதிநகர், இராமநாதபுரம், சாரமேடு, சிவராம்நகர், கள்ளிமடை, சிங்காநல்லூர், ஒண்டிபுதூர், வரதராஜபுரம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதி முழுவதிலும் பி.ஆர்.நடராஜன் எம்.பி. நன்றி அறிவிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  முன்னதாக, நாடாளுமன்ற உறுப் பினர்பி.ஆர்.நடராஜன் வாக்காளர் களுக்கு நன்றி தெரிவித்து பேசுகையில், மதச்சார்பற்ற கூட்டணியின் சார்பில் தமிழகம், புதுச்சேரியில் போட்டியிட்ட 39 பேர் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரி வித்துக்கொள்கிறோம். பாஜகவின் சூழ்ச்சியை அறியாத வடஇந்திய மக்கள் மீண்டும் மோடியை ஆட்சியில் அமர்த்தி யுள்ளனர். இப்போது நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி யுள்ளது. கார்ப்ரேட்டுகளுக்கு சேவகம் செய்கிற இந்த அரசால் இந்திய நாட்டின் அனைத்து தொழில்களும் தற்போது முடமாக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் வேலையில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள். வரலாறு காணத வகையில் வேலையில்லா திண் டாட்டம் அதிகரித்துள்ளது. மோடி அர சால்இதற்கு எந்த தீர்வையும் தரமுடி யாது. மாறாக இதில் இருந்து மக்க ளின் கவனத்தை திசை திருப்ப ஒரு  மொழி, ஒரு நாடு, காஷ்மீரத்திற்கான  சிறப்பு அந்தஸ்த்து ரத்து போன்ற பிரச்சனையை கிளப்புகிறார்கள். பாஜகவின் இத்தகைய சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தி தமிழகத்தில் இருந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தமான குரலை எழுப்பியும், மக் களை திரட்டி போராடியும் தமிழகத்திற் கான உரிமைகளை பெற்றுத்தருவோம்.  தற்போது கோவை மாநகராட்சி நமது மாநகர மக்களின் குடிநீர் விநியோகத்தை பன்னாட்டு நிறுவனத்திற்கு தாரை வார்த் துள்ளது. இதேபோல் சொத்துவரியை அநி யாயமாக உயர்த்தியுள்ளது. இதனை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என ஒன்றுபட்டு போராடி வருகிறோம். இதன்தொடர்ச்சியாக அக்டோபர் 10 ஆம் தேதி திமுக, சிபிஎம் உள்ளிட்ட தோழமை கட்சிகள் இணைந்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு  கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. மக்களின் உணர்வுகளை  அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு  உணர்த்தும் விதமாக இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வெகுதிரளாக மக்கள்  பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார். முன்னதாக, இந்த நன்றி அறிவிப்பு பிரச்சார இயக்கத்தில் திமுக சார்பில்  மாநகர பொருப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ, மாநில பொதுக்குழு உறுப் பினர் மு.வ.ச.முருகன், பகுதிகழக செய லாளர் எஸ்.எம்.சாமி, மதிமுக நிர்வாகி கள் சூரிய நந்தகோபால், தங்வேல், காங்கிரஸ் மாவட்ட பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கல்யாணசுந்தரம், கொமதேக மாவட்ட செயலாளர் தனபால், வடிவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  விடுதலை அன்பன், வடிவேல், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மனோகரன், சிங்கை நகர செயலாளர் வி.தெய்வேந்தி ரன், பீளமேடு நகரக்குழு செயலாளர் கே.பாண்டியன் மற்றும் ஏ.மேகநாதன்,  சீனிவாசன், கிருஷ்ணகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

;