tamilnadu

img

பொய்யர்களின் ஆட்சி அவர்களது பொய்களாலேயே வீழும்

 கோயம்புத்தூர், ஏப்.11- தாமரை ஒருபோதும் மலராது என்பதை ஏப்ரல் 18 ஆம்தேதி தமிழகம் பாஜகவிற்கு நிரூபிக்கும் என திரைப்பட இயக்குநர் கரு.பழ னியப்பன் கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கூறினார்.திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன்போட்டியிடுகிறார். திரைப்பட இயக்குநரும், சமூக செயல்பட்டாள ருமான கரு.பழனியப்பன் வியாழ னன்று பி.ஆர்.நடராஜனுக்கு ஆதரவு திரட்டி கோவையில் பல்வேறு பகுதிகளில் வாகன பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக, கோவை பாப்பநாயக்கன்பாளையம் காய்கடை மைதானத்தில் துவங்கிய இந்த பிரச்சார பயணத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் துவக்கி வைத்து உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து கரு.பழனியப்பன் பேசுகையில், மோடி அர சால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து திரும்பத் திரும்ப பேசியாக வேண்டும்.கோ பேக் மோடி என்றோம். இங்குதாமரை ஒருபோதும் மலராது என்கிறோம். இதனை நிரூபிக்க கூடிய நாள் ஏப்ரல் 18. பொய் மூலமாகவே ஆட்சியை பிடித்தோம், நிலைத்தோம், மீண்டும் வருவோம் என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான்சாவு என்பது போல் பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்களுக்கு அந்த பொய்யாலே தான் வீழ்ச்சி என்றார். மேலும் அவர் பேசியதாவது: ‘‘சிறு, குறு தொழில் ஜி.எஸ்.டி. 5 சதவிகிதமாக குறைக்கப்படும் என்கிறார் மோடி; பாஜக வேட்பாள ரும் அதைத் தேர்தல் வாக்குறுதியாக அளிக்கிறார். ஐந்தாண்டுகள் இவர்கள் தானே ஆட்சியில் இருக் கிறார்கள். இவர்கள் தானே ஜிஎஸ்டி கொண்டு வந்தார்கள். தொழிலுக்கு பாதிப்பு என்பதை உணர்ந்து ஜிஎஸ்டியை அப்போதே குறைக்க வேண்டியதுதானே. இப்போது இவர்கள் சொல்வது ஏமாற்று வேலை என்பதை மக்கள் புரிந்து கொண்டுள் ளார்கள். 5 ஆண்டுகள் இவர்களின் ஆட்சியை பார்த்துவிட்டார்கள். இனிமேல் ஏமாறமாட்டார்கள். பாஜகவின் தேர்தல் அறிக்கை சமீபத்தில் வெளியானது. அதனை நையாண்டி செய்து சிலர் மீம்ஸ் போட்டு வரு கிறார்கள். அது நையாண்டி என்பதே என்று தெரியாமல் அதற்கும் பாஜகவினர் வக்காலத்து வாங்கு கின்றனர் இதுதான் இவர்களின் லட்சணம். இவர்கள் இந்துக்கள், இந்துக்கள் என்கின்றனர். நாங்கள் சொல்கிறோம் இந்துகள் சுய மரியாதையோட வாழ வேண்டும் என்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குவாக்களிக்க வேண்டும் என்கிறோம். 


சங்கராச்சாரியார் முன்பு சுப்பிர மணிசாமி உட்கார முடியும். பொன். ராதாகிருஷ்ணனால் உட்கார முடி யுமா? தூத்துக்குடியில் தமிழிசை தோற்பார் என்று தெரிந்தே போட்டியிட வைப்பார்கள். நிர்மலா சீத்தாராமனை பாதுகாப்பு அமைச்சராக்குவார்கள். ஒரு போதும் தமிழிசை நிர்மலா சீத்தாராமனாக முடியாது. எந்த கூட்டத்திற்கு வந்தாலும் காவி சட்டையுடன் செல்லும் சி.பி.ராதாகிருஷ்ணன், இப்போது வெள்ளை சட்டை அணிந்து வந்து வாக்கு கேட்கின்றார். ஜெயித்து வந்தால் உங்களுக்குகாவி சட்டையை போட்டுவிடு வதற்காகத்தான் இப்போது அவர் வெள்ளை சட்டை போட்டுவருகிறார். இவரிடம் கோவை மக்கள் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும். பல கோடி மதிப்பிற்கு டிரஸ் போட்ட மோடி, இப்பொது வாட்ச்மேன் டிரஸ்ஸை போட்டுக்கொண்டு ஏமாற்றுகின்றார். பலமுறை கோ பேக் மோடி என்று சொன்ன நாம் இந்த தேர்தலில் கோ பேக் மோடி என சொல்வதுதான் முக்கியம். இங்கே தமிழகத்தின் எடப்பாடி பற்றி சொல்லவே வேண்டாம். பொள்ளாச்சி சம்பவத்திற்கும், சிறுமிகொலைக்கும் முதல்வர் ஒரு கண்டனம்கூட தெரிவிக்கவில்லை. பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதல் கூட கூறவில்லை. தவறு செய்தவர் யாரா யினும் தண்டனை கொடுக்க வேண் டாமா? எடப்பாடியின் பெயரைச் சொன்னாலே மக்கள் சிரிக்கின்றனர். இப்படி சிரிப்பாய் சிரிக்கிற முதல்வர் தான் நமக்கு வாய்த்திருக்கிறார். அதேநேரத்தில் நாங்கள் ஆதரிக்கிற சிபிஎம் வேட்பாளர் மக்களோடு மக்களாக இருப்பவர்கள். ஆகவே, பி.ஆர்.நடராஜன் அவர்களை வெற்றி பெறவைத்து நாடாளுமன்றத்திற்கு மக்கள் குரலை எதிரொலிக்க அனுப்பவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

;