tamilnadu

img

அரசு மரக்கிடங்கு காவலருக்கு ஓராண்டாக சம்பளம் வழங்காமல் இழுத்தடிக்கும் வனத்துறையினர்

மேட்டுப்பாளையம், அக். 2- மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு மரக்கிடங்கில் காவலராக பணி யாற்றி வரும் காவலருக்கு வனத்துறை யினர் கடந்த ஓராண்டாக சம்பளம்  வழங்காததால் வருவாயின்றி பரி தவித்து வருகிறார்.  கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் வனச்சோதனை சாவடி பின்புறம் அமைந்துள்ளது அரசு மரக்கிடங்கு. இங்கு வனத்தினுள் இயற்கை சீற்றங்களால் சாய்ந்த காட்டு மரங்கள் மற்றும் மரக் கடத்தல்காரர்களிடம் இருந்து பிடிபட்ட மரங்கள் என கோடிக்கணக் கான ரூபாய் மதிப்புடைய பெரும் மரங்கள் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்த வளா கத்தில் தமிழ்நாடு வனத்துறைக்கு சொந்தமான அரசு வன பயன்பாட்டு மையம் இயங்கி வருகிறது. இங்கு மரங்களை நவீன தொழில் நுட்பத்துடன் பதப்படுத்தி மேசை, நாற்காலி, பீரோ உள்ளிட்டவைகளை உருவாக்கி தமிழகம் முழுவதும் உள்ள  அரசு அலுவகங்களுக்கு தேவைக் கேற்ப அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் தனியார் மர அறுவை ஆலை களில் இருந்து கொண்டு வரப்படும் மரங்களும் இங்கு வனத்துறை சார் பில் பதப்படுத்தி தரும் மர தொழில் நுட்ப மையமாக இயங்கி வருகிறது. இந்நிலையில், வன மரபியல் துறையின் கீழ் இயங்கும் இந்த அரசு மர பயன்பட்டு வளாகத்தில் காவல ராக பணியாற்றி வருபவர் சுப்பிரமணி யம் (64). கடந்த 2000 ஆம் ஆண்டு  பணியாளராக சேர்ந்தார். மரக்கிடங்கு வளாகத்தில் தனக்கென ஒதுக்கப் பட்ட சிறிய அறையில் தனது மனை வியுடன் தாங்கியபடி பணிபுரித்து வரும் சுப்பிரமணி, பகல் நேரங்களில் மரங்களை அடுக்குவது, அவற்றை  பதப்படுத்த உதவுவது, வளாகத்தை யும் அதன் இயந்திரங்களையும் சுத்தப்படுத்துவது, பராமரிப்பது, பார்வையிட வரும் அதிகாரிகளுக்கு டீ, பிஸ்கட் போன்றவைகளை வாங்கி  வருவது என ஒரு இளைஞரை போல தொடர்ந்து நிற்காமல் வேலை செய் கிறார்.

இந்த வளாகம் அடர்ந்த காட்டின் எல்லையில் அமைந்துள்ளதால் மாலை ஐந்து மணிக்குள் அனைவரும் சென்று விட தனியொரு மனிதராக இரவு நேரத்தில் வாட்ச்மேனாக அரசு மரக்கிடங்கை பாதுகாக்கிறார். இவர் தங்கியுள்ள இடத்தில் இருந்து சுமார் இருநூறு மீட்டர் தொலைவிலேயே யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நீர் அருந்தி செல்ல தண்ணீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. எனவே இங்கு கூட்டம் கூட்டமாக யானைகள் வந்து  செல்வது வழக்கம். இவற்றை கண் காணிப்பதும், தாகம் தீர்த்த யானை கள் மீண்டும் காட்டுக்குள் திரும்பாமல் மரக்கிடங்கிற்குள் நுழைய முற்பட் டால் அவற்றை விரட்டுவதும் இவரே. பல நேரங்களில் இவரை யானைகள் விரட்டி வருவதும் உண்டு.

அரசு மரக்கிடங்கு பகுதியில் புலி மற்றும் சிறுத்தைகளும் நடமாடி வருகின்றன. உயிருக்கு சற்றும் உத்திர வாதமில்லாத இடத்தில் தங்கி அர சுக்கு சொந்தமான காட்டு மரங்களை யும் அதனை பதப்படுத்தும் ஆலை யினையும் பாதுகாத்து வரும் சுப்பிர மணியத்திற்கு கடந்த 12 மாதங்களாக சம்பளம் தரப்படவில்லை. கடந்த 2000 ஆம் ஆண்டு ரூ.2,175 சம்பளத்திற்கு பணியில் சேர்ந்த இவரது சம்பளம் தற்போது ரூ.10 ஆயிரம். இவரது சம்பள தொகை வன மரபியல் துறை யின் சென்னை அலுவலகத்தில் இருந்து கொடுக்கப்பட்ட போது மாதம் தவறால் கிடைத்த நிலையில், இப்பொறுப்பு கோவையில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு மாற் றப்பட்ட பின்னர் சிக்கல் ஏற்பட்டுள் ளது.

மேலும், இரண்டு மாதம், மூன்று மாதம் என விட்டு விட்டு சம்பளம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரேயடியாக கடந்த 12  மாதங்களாக சம்பளமே வழங்கப்பட வில்லை. ஏறத்தாழ இருபதாண்டுக ளாக வனத்துறையில் பணியாற்றி தற்போது 64 வயதாகும் முதியவர் சுப்பிரமணி, இது குறித்து பலமுறை கோவை சென்று வனத்துறை அலு வலகத்தில் முறையிட்டும் இதுவரை பலனில்லை. இன்னும் ஒரு வாரத்தில் சம்பளம் வழங்கப்பட்டு விடும் எனக் கூறியே பல மாதங்களாக இழுத்தடித்து வருவதாக வேதனை தெரிவிக்கும் சுப்பிரமணி, இதனால் உணவுக்கு கூட வழியின்றி தவித்து வருவதாக கண்ணீருடன் கூறுகிறார். இது குறித்து தொடர்புடைய வனத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, “நிதி பற்றாக் குறை காரணமாக சுப்பிரமணியின் சம்பளம் தடைபட்டுள்ளது, விரைவில் நிலுவையில் உள்ள சம்பளத்தொகை முழுவதுமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.  இதையே தான் தன்னிடமும் பல மாதங்களாக அதிகாரிகள் கூறி வரு கின்றனர், எப்போது என்பதை கூற  மறுக்கின்றனர் என்கிறார் முதியவர் சுப்பிரமணி. அன்றாட உணவு மற்றும் மருந்து செலவுக்கு கூட வழியின்றி தவித்து வந்தாலும், தனக்கு வழங்கப் பட்ட கடமையினை இன்று வரை தவ றாமல் செய்து வரும் சுப்பிரமணியத் திற்கு உடனடியாக சம்பளம் வழங்கப் பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

;