tamilnadu

img

கோபிநாதம்பட்டி கூட்ரோடு பாலத்தின் தடுப்புச் சுவரை சீரமைக்க கோரிக்கை

தருமபுரி, ஏப்.24-அரூரை அடுத்த கோபிநாதம்பட்டி கூட்டுச் சாலையில் உள்ள உயர்மட்ட பாலத்தின் தடுப்புச் சுவரை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தருமபுரி மாவட்டம், அரூர் - சேலம் நெடுஞ்சாலையில், கோபிநாதம்பட்டி கூட்டுச் சாலையில் வாணியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைந்துள்ளது. இந்த உயர்மட்ட பாலமானது சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்தச் சாலையில் சேலம், ஈரோடு, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய தொலைதூரப் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள், லாரிகள், கார்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன.இந்நிலையில், உயர்மட்ட பாலத்தின் தடுப்புச் சுவர் சேதமடைந்துள்ளது. பாலத்தின் தடுப்புச் சுவர் வழியாக ஏற்கெனவே வாகனங்கள் கவிழ்ந்து உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. எனவே, சேதமடைந்த உயர்மட்ட பாலத்தின் தடுப்புச் சுவரை சீரமைப்பு செய்து பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

;