tamilnadu

img

ஊதிய பேச்சுவார்த்தையை உடனே துவங்குக போக்குவரத்து ஊழியர்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம்

உதகை, மார்ச் 11- 14 வது ஊதிய பேச்சுவார்த் தையை உடனே துவங்க வேண் டும் என கோரி போக்குவரத்து ஊழியர்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். போக்குவரத்து ஊழியர்க ளுக்கு மலைவாழ் படியாக ரூ.6  ஆயிரம் வழங்க வேண்டும். 2003ஆம் ஆண்டு முதல் பணி யில் சேர்ந்த அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை வழங்க வேண்டும். 14வது ஊதிய பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டம் மண்டல தலைமை போக்குவரத்து அலுவலகம் முன்பு புதனன்று போக்குவரத்து ஊழியர்கள் இரண் டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு எல்பிஎப் தொழிற்சங்கத்தின் மண்டலச் செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். 

இதில், தமிழ்நாடு அரசு போக் குவரத்து ஊழியர் சங்கம் சிஐ டியு துணைப் பொதுச் செயலா ளர் கணேசன், ஏஐடியூசி போக்கு வரத்து தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் இப்ராஹிம், ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழி யர் நல சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் மனோக ரன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். சிஐடியு மாவட்டத் தலை வர் கே.சுந்தரம் போராட்டத்தை வாழ்த்தி பேசினார். இந்தப் போராட்டத்தில் கோவை மண்டல  நிர்வாககுழு உறுப்பினர்கள் யோக சசி, ராமன் உள்ளிட்ட ஏராளமான போக்குவரத்து தொழி லாளர்கள் கலந்து கொண்டனர்.

கோவை

இதேபோல்,  கோவையில் இரண்டாவது நாளாக  தொடர்ந்து நடைபெற்ற இந்த காத்திருப்பு போராட்டத்தை வாழ்த்தி எல்பி எப் தொழிற்சங்க தலைவர் தியாக ராஜன், சிஐடியு மாவட்டத் தலை வர் சி.பத்மநபான், செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஏஐ டியுசி தலைவர் எம்.ஆறுமுகம் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்தி உரையாற்றினர். இதில், ஏராள மான தொழிலாளர்கள் பங்கேற்ற னர்.

;