tamilnadu

கோவையில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறதா? முதல்வரின் பேச்சு சமூக பரவலுக்கே வித்திடும் – எம்.பி., எம்எல்ஏ கண்டனம்

கோவை, ஜூன் 26- கொரோனா தொற்றின் அபா யம் அறியாமல் கோவையில் கொரோனா கட்டுக்குள் இருப்ப தாக முதல்வர் பேசுவது தன்னைத் தானே முதுகை தட்டிக்கொள்ளும் செயல். முதல்வரின் இத்தகைய பேச்சால் எச்சரிக்கை உணர்வில் லாமல் மக்கள் அவசியமற்று நட மாடும் சூழல் ஏற்பட்டால் சமூக பரவலாக மாறி பெரும் அச்சுறுத் தலை சந்திக்க வேண்டி வரும் என மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், திமுக சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த் திக் ஆகியோர் சாடியுள்ளனர்.

இதுகுறித்து இருவரும் தனித் தனியே வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது, கோவையில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கோவை வந்த முதல்வர் எடப் பாடி கே.பழனிச்சாமி தெரிவித் துள்ளார். மேலும், இதுவரை 36 ஆயிரத்து 905 பேருக்கு கொரோனா பரிசோதனை செய் யப்பட்டுள்ளதாக முதல்வர் தெரி வித்துள்ளார். 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட கோவையில் வெறும் 36 ஆயிரம் பேருக்கு மட் டுமே பரிசோதனை செய்யப்பட் டுள்ளது. தற்சமயம் ஒரு நாளைக்கு 50 பேருக்கு கூட பரிசோதனை செய்யப்படுவதில்லை என்கிற நிலையில், மக்கள் அச்சத்தோடு வாழ்ந்து வருகின்றனர். எந்த வித அறிகுறியும் இன்றி தானாகவே மருத்துவ பரிசோத னைக்கு சென்ற பலருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது.

கோவை மாவட் டத்தில் தற்போது முன்னைக்காட் டிலும் பல்வேறு பகுதிகள் தனி மைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளி நாடு, வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டம் ஆகியவற்றில் இருந்து வந்தவர்களில் அதிகம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது உண்மை யாகும். ஆனால், இவர்களுடன் எந்த தொடர்பும் இல்லாத பலருக் கும் நமது மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என் பதை மறுக்க முடியாது.  இந்நிலையில்  முதல்வர் கொரோனா கட்டுக்குள் இருக்கி றது என எந்த ஆதாரத்தின் அடிப்ப டையில் பேசினார் என்பது தெரிய வில்லை.

இத்தகைய பேச்சினால் பொதுமக்கள் இதுவரை கடை பிடித்து வந்த எச்சரிக்கை உணர்வை கைவிடும் சூழல் ஏற்படும் ஆபத்து உள்ளது. இதன் காரணமாக தொற்றாளர்கள் யார் என தெரியாமல் பழகி சமூக பரவ லுக்கு காரணமாகிவிடும். பிறகு சென்னையைபோல் இதனை கட் டுப்படுத்துவது பெரும் சவாலுக்கு ஆளாக்கிவிடும்.

ஆகவே, கொரோனா கட்டுக்குள் வந்து விட்டது என்று தன்னைத்தானே முதுகை தட்டிக்கொள்வதை விடுத்து கொரோனா பரிசோத னையை அதிகப்படுத்துங்கள். பெரும்பாலான மக்களுக்கு மருத் துவ பரிசோதனையை செய்து விட்டு கோவை மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டம் என்பதை பெருமையோடு அறிவி யுங்கள் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

;