tamilnadu

img

பாலியல் வன்கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம்

கோவை, ஜூலை 15-  கோவை துடியலூர் அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சத்திற்கான காசோலையை கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி வழங்கினார்.   கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்க ளன்று நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலு வலர் ராமதுரைமுருகன், சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் அமுதன், ஆட்சியரின் நேர்முக உதவியா ளர் உமாமகேஷ்வரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங் கத்தின் மாவட்ட பொருளாளர் ஜோதிமணி, மாநிலக்குழு உறுப்பினர் சுதா மற்றும் அகில இந்திய வழங்கறிஞர் சங்கத் தின் வழக்கறிஞர் சீலாராஜ் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக சிறுமியின் படுகொலைக்கு காரணமான குற்றவாளியைக் கைது செய்யவதற்கான தொடர்போராட் டத்தை நடத்தியும், முதல் அமைச்சர் நிவாரணத்தை பெற்றுத்தரும்வரை உறுதியோடு இருந்த மாதர் சங்க அமைப்பிற்கும், இதன் தலைவர்களுக்கும் சிறுமியின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர். மேலும்,  சிறுமியின் தாயாருக்கு விரைவில் அரசுப்பணிக்கான ஆணை பிறப்பிக்கப்படும் எனவும்,இதற்காக அவரின் கல்வி சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேட்டுள்ளதாக மாதர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

;