tamilnadu

img

மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பில்லாத அரசு அலுவலகங்கள்

அவிநாசி, செப். 2- அவிநாசி பகுதியில் அரசு அலு வலகங்களில் மழை நீர் சேகரிக்க உரிய கட்டமைப்பு ஏற்படுத்தப் படாதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கோடை காலம் மட்டுமின்றி அனைத்து கால நிலை களிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், வீடுகள் மற்றும் அனைத்து நிறுவனங்களிலும் மழைநீர் சேகரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதேபோல், மத்திய அரசு ஜல் சக்தி அபியான் என்ற திட்டத்தின் பேரில் திருப்பூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், வீடுகள் மற்றும் எல்லா பகுதிகளிலும் மழைநீர் சேகரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இத் திட்டத்தை செயல்படுத்த கிராமப் புற 100 நாள் வேலை அளிப்பு திட்டத்தின் வேலையாட்களை பயன்படுத்துகின்றனர். இதை கண்காணிக்கும் வகையில் திருப் பூர் மாவட்டத்தில் மத்திய அரசு அதிகாரி ஆய்வுக் குழுவினர் மழைநீர் சேகரிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இத்திட்டம் அவிநாசி, பூண்டி பேரூராட்சி தவிர்த்து அரசு அலுவலகங்களில் மழை நீர் சேகரிப்பு  எங்கும்  செயல்படுத் துவதாக தெரியவில்லை.  அவிநாசி ஒன்றியம் 31 கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கி யது.

மேலும், இரண்டு பேரூராட் சிகள் இப்பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு வட்டாட்சியர் அலுவலகம், மருத்துவமனை, பத்திரப்பதிவு அலுவலகம், பால் சொசைட்டி, அங்கன்வாடி மையம், அரசுப் பள்ளிகள், வேளாண் துறை அலுவலகம், கிராமப்புற சுகாதார நிலையம், தபால் அலுவலகம், நீதிமன்றம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் ஆகியவை உள்ளன. இவற் றில் மழை நீர் சேகரிக்க எந்த ஏற் பாடும் செய்யப்படவில்லை. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் பழனிசாமி கூறு கையில், அவிநாசி ஒன்றியம் வறட்சியான பகுதியாகும். நிலத் தடி நீர்மட்டம்  1500 அடிக்கு கீழே  சென்றுவிட்டது. இதனால் விவசா யம் பொய்த்துப் போய்விட்டது. வானம் பார்த்த பூமியில் விவ சாயம் செய்து வருகின்றனர்.  தற்போது தான் மத்திய அரசு மழைநீர் சேகரிப்பு அவசியம் உணர்ந்து செயல்படுகின்றது. ஆனால் 2006-ம் ஆண்டு தமிழக அரசால் மழை நீர் சேகரிப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்பட் டது. அப்பொழுதே முழுமையாக செயல்படுத்தி கண்காணிப்பு பணி செய்திருந்தால் பெருமளவு தண் ணீர் பற்றாக்குறையே இல்லா மல் இருந்திருக்கும்.  இந்நிலையில், அரசு குளம், குட்டைகளை தூர்வாரி மழை நீரை சேமிக்க வேண்டும். நிலத் தடி நீரை உறிஞ்சும் மரங்களை குளம், குட்டைகளில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். இச்சூழலில் தற்போதாவது மழைநீர் சேகரிப்பு திட்டங்களை அரசு அலுவலகங்களை பின் பற்றி மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண் டும் என்று தெரிவித்தார்.

;