tamilnadu

img

தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த நிர்பந்தம் - மாணவர் கூட்டமைப்பு புகார்

 பொள்ளாச்சி, மே 12- கொரோனோ ஊரடங்கு காலத்திலும் பொள்ளாச்சி பகுதிகளிலுள்ள தனியார் பள்ளிகளில் உடனடியாக கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும் என மாணவர்களின் பெற் றோர்களுக்கு பள்ளி நிர்வாகம் தொந்தரவு அளித்து வருவதாக மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்ட மைப்பினர் புகார் மனு அளித்தனர். இதுதொடர்பாக மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இரா.மனோகரன் தலைமையில் கூட்டமைப்பின் ஒருகிணைப்பாளர்கள் கே.மகாலிங்கம், பிரகாஷ், துரைபாய், ந.கண்ணுச்சாமி, ராஜேஷ் ஆகியோர் பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் மே17 ஆம் தேதிவரை கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசு கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதனை யடுத்து தமிழக பள்ளிகல்வித்துறை முறையான அறிவிப்பு வரும் வரை பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டம், பொள்ளாச்சி சுற்று வட்டாரங்களிலுள்ள தனியார் பள்ளிகளில் பயிலும் மாண வர்களின் பெற்றோர்களுக்கு தொடர்ந்து அலைபேசிகளின் மூலமாகவும், குறுஞ்செய்திகள் மூலமாகவும் பள்ளிக் கட் டணம் செலுத்தக்கோரி நிர்பந்தம் அளிப்பதாக மாண வர்களின் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  மேலும் அரசின் ஊரடங்கு விதிகளை மீறி தனியார் பள் ளிகள் திறக்கப்பட்டு, அலுவலகங்களில் கட்டணங்கள் வசூ லிக்கப்பட்டு வருகிறது. எனவே, மாணவர்களின் கல்விக் கட்டணங்கள் கேட்டு, வற்புறுத்துகின்ற தனியர் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரடங்கு தளர்த் தப்பட்டு மறு உத்தரவு வரும் வரை  தனியார் பள்ளிகளின் அலுவலகங்கள் திறபப்பதை தடுக்க வேண்டும் என அம் மனுவில் குறிப்பிட்டிருந்தது.

;