tamilnadu

img

இளம் வழக்கறிஞர்களுக்கு மாத உதவித்தொகை வழங்கிடுக

கோவை, அக். 22– இளம் வழக்கறிஞர்களுக்கு மாத உதவித் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க தமிழக அரசை வலியுறுத்தி செவ்வாயன்று கோவை யில் அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலை வர் மாசேதுங் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக் கறிஞர் சங்கத்தின் கூட்டுக் குழு தலைவர்  நந்தகுமார், கோவை வழக்கறிஞர் சங்க செயலாளர் சுதீஸ் ஆகியோர் கோரிக் கையை வலியுறுத்திப் பேசினர். இந்த ஆர்ப் பாட்டத்தை வாழ்த்தி வழக்கறிஞர்கள் சி.முருகேசன், சா.பாலமுருகன், துரை.இளங்கோவன், லூயீஸ், செரீப் உள் ளிட்டோர் உரையாற்றினர். மேலும், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கோபால் சங்கர், பொருளாளர் மணிவண்ணன், வழக் கறிஞர்கள் மு.ஆனந்தன், செல்வராஜ், வேலுச்சாமி, தேவராஜ், ஜோதிக்குமார், ராஜசிம்மன், கரீம், சீலாராஜ், ஆறுச்சாமி, சந்திரசேகர் உள்ளிட்ட ஏராளமான வழக் கறிஞர்கள் பங்கேற்றனர். முடிவில் சுந்தர மூர்த்தி நன்றி கூறினார்.

;