tamilnadu

img

விசைத்தறி தொழிலாளர் கூலி பிரச்சனைக்கு தீர்வு காண்க

நாமக்கல், மே 7-குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலில் பணிபுரியும் ஆண், பெண் தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி உயர்வு வழங்ககோரி நடைபெற்று வரும் வேலைநிறுத்தத்தை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பேசித்தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு சார்பில் மனு அளித்தனர்.நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டாரத்தில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலிஉயர்வு வழங்க கோரி சிஐடியு, ஏஐடியுசி, எச்எம்எஎஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் வேலை நிறுத்தம் உட்பட பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த மே 2 ஆம் தேதியில் வட்டாட்சியரை சந்தித்து முறையிட்டனர். பின்னர் மே 3 ஆம் தேதியன்று காவல் ஆய்வாளர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உரியஉடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் விசைத்தறி தொழிலாளர்கள் குமாரபாளையத்தில் தொடர்  வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆகவே, தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை உடனடியாக பேசித் தீர்வு காண வேண்டும். விசைத்தறி கூடங்களில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி, பண்டிகை காலங்களில் விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி செவ்வாயன்று சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி தலைமையில் நாமக்கல்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.இதில் குமாரபாளையம் விசைத்தறி தொழிலாளர் சங்க நகர செயலாளர் கே.பாலுசாமி, நிர்வாகிகள் வெங்கடேசன், சரவணன், மேகநாதன், சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;