tamilnadu

img

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவக்கிடுககோயம்புத்தூர்

போக்குவரத்து தொழிலாளர்கள் வலியுறுத்தல்

சேலம், பிப்.11- ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே துவங்க வலியுறுத்தி சேலம் போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு  அனைத்து தொழிற்சங்கங்கள் சார் பில் வாயிற்கூட்டம் நடைபெற்றது. 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை யை உடனே துவங்க வேண்டும். 2003  ஆம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்த வர்களுக்கு ஓய்வூதிய சட்டம் அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். டீசல்  கலெக்சன் என்ற பெயரில் தொழிலாளர் களை வதைக்கக் கூடாது.  தொழிலாளர் நலச்  சட்டங்களை முறையாக பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி அனைத்து போக்கு வரத்து தொழிற்சங்கங்களின் சார்பில் சேலம் போக்குவரத்து தலைமை அலுவ லகம் முன்பு வாயிற்கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு தொமுச போக்கு வரத்து சங்க தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். சிஐடியு அரசு போக்கு வரத்து உதவி செயலாளர் எம்.கனகராஜ் சிறப்புரையாற்றினார். சிஐடியு அரசு விரைவு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் உதவி பொது செயலாளர் முருகேசன், சிஐடியு போக்குவரத்து சங்க பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைவர் செம்பன், பொருளாளர் சேகர், துணை செயலாளர் செந்தில்குமார், ஏஐடியுசி செயலாளர் முருகராஜ், ஏஏல் ஏல்ஏப் ஆறுமுகம், டிடிஎஸ் மனோகரன் உள்ளிட்ட அனைத்து சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண் டனர். 

;