tamilnadu

img

கொரோனா சிறப்பு மையம்- கொடிசியாவின் மறுபக்கம்

தனியார் மருத்துவமனைக்கு இணையாக உருவாகும் கொடிசியா அரங்குகளால் கொரோனா நோயா ளிகள் குதூகலம். சாமானிய மக்க ளும் தனியார் மருத்துவமனையின் கவனிப்பை இங்கு பெறலாம் – இது தான் கொரோனா நோயாளிகளுக் காக 400 படுக்கை வசதிகளுடன் கொடிசியா அரங்கம் சிறப்பு சிகிச்சை மையமாக உருமாற்றப்பட்டபோது கோவையிலுள்ள ஊடகங்களால் மெய்சிலிர்த்து எழுதப்பட்ட வார்த் தைகள்.

ஆனால், உண்மையில் இந்த சிகிச்சை மையம் எந்தளவுக்குப் பயன ளித்து வருகிறது என்பதை நோயாளி களின் நிலையோடு ஒப்பிட்டு உணர் வது முக்கியமான ஒன்று.

முன்னதாக, ஜூலை மாதத்தின் துவக்கத்தில் கோவையில் அதிகரித் துக் கொண்டிருந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கார ணமாக சிகிச்சைக்கு இ.எஸ்.ஐ மருத் துவமனை மட்டும் போதாது என்கிற நிலையில், கோவையின் மிகப்பெரும் வர்த்தக வளாகமான கொடிசியா அரங்கினை 400 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு வார் டாக மாற்றும் நடவடிக்கை துவங்கி யது.

இதன்பின்னர் பயன்பாட்டுக்கு வந்த அவ்வரங்கம் சிறிய அளவி லான கொரோனா அறிகுறிகள் உள் ளோரை மட்டும் கவனித்துக் கொள் ளும் முகாமாக மாறியது. இதனால் குறைந்த அறிகுறிகள் கொண்டோ ரும், ஓரளவு எதிர்ப்பு சக்தி உடை யோரும் இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

 இந்நிலையே தற்போதும் தொடர்ந்து வருகிறது. ஆனால், கொடிசியா குறித்து அரசு நிர்வாகம் மற்றும் ஊடங்களால் முன்னர் கூறப் பட்ட தகவல்களும், தற்போது அங்கு கிடைக்கப் பெற்று வரும் வசதிகளும் அவர்கள் கூறியபடி உண்மையோடு பொருந்துகிறதா என்பதை அறிய வேண்டுமெனில் அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்களி டம் தான் பதில் உள்ளது. இதோ கொடி சியா குறித்து வெளியான வகை, வகையான வார்தைகளோடு ஒவ் வொரு நோயாளியின் கதையையும் ஒப்பிட்டா‘ல் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளலாம்.

இஎஸ்ஐ டூ கொடிசியாவா?

கொடிசியாவில் சிகிச்சை பெற்று வரும் 88 வயது மதிக்கத்தக்க ஒரு வயதானவரிடம் விசாரிக்கை யில், திருமணம் செய்து கொள்ளா மல் சொந்தங்களின் அரவணைப்பும் இல்லாமல் வீட்டு வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வரும் இவருக்கு கொரோனா அறிகுறி மிகு தியாக தென்பட்டதன் விளைவாக ஆரம்பத்தில் இ.எஸ்.ஐ மருத்துவம னையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அனைத்தும் முடிந்து டிஸ்சார்ஜ் ஆகும் சமயத்தில் ஆம்பு லன்சில் ஏற அறிவுறுத்தப்பட்டுள் ளார். வீட்டிற்கு செல்கிறோம் என நினைத்த ஆம்புலன்சில் ஏறியவ ருக்கு நடந்தது என்னவோ ஏமாற்றம் தான். அந்த ஆம்புலன்ஸ் நேராக கொ டிசியா செல்ல, அங்கும் அவரை சரி யாக ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல் புதிதாக கொரோனா வந்தவர் என யூகித்து கொடிசியாவில் சிகிச்சைக் காக மீண்டும் அனுமதித்துள்ளனர்.  

இதுதொடர்பாக, அவர் விசாரிக் கையில் ஆம்புலன்ஸ் இஎஸ்ஐ-யிலி ருந்து கொடிசியாவிற்கும், கொடிசி யாவிலிருந்து இஎஸ்ஐ–க்கும் தான் செல்லுமே தவிர நோயாளிகளை வீடு வரை கொண்டு சென்று விடாது என்பதே அவருக்கு பின்னர் தெரிய வந்துள்ளது.

இதன்பின்னர் அந்த வயதானவர் வீட்டிற்குச் சென்ற கதை எவ்வளவு பரிதாபமானது என்பது ஒருபுறம் இருப்பினும், ஏற்கனவே சிகிச்சை பெற்று முடித்த ஒருவர் எவ்வாறு எந்தவித மறு ஆய்வுக்கும் உட்படுத்தப்படாமல் மீண்டும் கொடி சியாவில் சிறு அறிகுறி உள்ளவராக அனுமதிக்கப்பட்டார் என்பதே இங்கு கேள்வியாக உள்ளது.

நிலை இவ் வாறு இருக்கையில் இன்னமும் இது போல் பல நோயாளிகள் இங்கு தவறு தலாக சேர்க்கப்படும் பட்சத்தில் ஏற்கனவே அங்கு அனுமதிக்கப்பட் டுள்ள குறைந்த அறிகுறி கொண் டோருக்கு இது ஆபத்தாய் முடியாதா என்பது கேள்விக்குறியே. ஆக, கொடி சியா எப்படி குறைந்த அறிகுறி கொண்டோருக்கான தரமான சிகிச்சை மையமாக அரசு முன்னி றுத்த முடியும் ?

 மறந்து போனதோ அல்லது மறைந்து போனதோ...

 23 வயது மதிக்கதக்க இளம்பெண் ஒருவர் கூறுகையில், தொடர்ந்து சுவையுணர்வு தெரியாததால் கொரோனா பரிசோதனை மேற் கொண்டுள்ளார். இதன்பின் 4 நாட்க ளாகியும் டெஸ்ட் ரிசல்ட்ஸ் வராத போதும் (அரசின் கூற்றுப்படி 2 நாட்கள் எத்தகவலும் பாதிக்கப்பட் டவருக்கு அளிக்கப்படவில்லையெ னில் அவர் தொற்று அற்றவர்) கூட இன்னமும் சுவை தெரியாததால் தன் னிச்சை முயற்சியின் காரணமாக பலரை தொடர்பு கொண்டு இறுதி யாக பரிசோதனை முடிவுகளை தெரிந்து கொண்டுள்ளார்.

இதில் பாசிட்டிவ் என வந்ததால் தாமாகவே முன்வந்து கொடிசியாவில் தன்னை அனுமதித்துக் கொண்டார். ஆக அறி குறிகள் பெரிதாக இல்லாத பட்சத்தில் மக்களின் உயிரை அரசு பொருட்ப டுத்தவில்லையோ என நினைக்க வேண்டியுள்ளது.  காம்பவுண்டு வீடு என்பதால் 4,5 குடும்பங்கள் பொதுக் கழிப்பிடத்தை உபயோகிக்க வேண்டியதால் தொற்று மற்றவர்களுக்கும் பரவி விடுமோ என பயந்து வீட்டு தனிமைப் படுத்துதலைத் தவிர்த்து கொடிசியா விற்குச் சென்ற அவர் அங்கும் புதிதாக எதையும் கண்டுவிடவில்லை.

ஏனெ னில் உணவு வேளா, வேளைக்கு வழங்கப்பட்ட போதும் தனிமைப்ப டுத்துதல் அங்கு சரியாக கடைபிடிக் கப்படவில்லை. கொடிசியா அரங் கின் உள்ளே சென்றவுடனேயே, எந்த கட்டில் ஆளில்லாமல் உள்ளதோ அங்கே சென்று படுத்துக் கொள்ளுங் கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார். மேலும், ஒரு நோயாளி சிகிச்சைக்காக சென்ற பிறகு அவர் உபயோகித்த எதுவும் சுத்தப்படுத்தப்படுவதில்லை என்பதை உணர்ந்தாக தெரிவிக்கி றார்.  

இதேபோல், குறைந்த அளவி லேயே மின்விசிறி இருப்பதால் சர்க் கரை நோயாளிகள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதா கவும் தெரிவிக்கிறார். அதோடு கிட்டத்தட்ட 60 பேர் பயன்பாட்டிற் காக 5 கழிப்பறைகளே பயன்படுத்தும் படி இருந்தது ஊடங்களில் மிகைப்ப டித்தி காட்டிய கொடிசியாவின் பார் வையை முற்றிலும் சிதைத்தது. பரி சோதித்து பாசிட்டிவ் பெறப்பட்ட நாளிலிருந்து 10 நாளிற்கு பிறகு அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

ஆனால், செல்வதற்கு முன் மறுபரி சோதனை செய்யப்பட்டு நெகட்டிவ் வந்தால் மட்டுமே வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற நடைமுறை காலப்போக்கில் மறந்து போனதோ அல்லது மறைந்து போனதோ என தெரியவில்லை.

ஆக, கொரோனா பரிசோதனை செய்து கொண்ட நபர்க ளுக்கு விரைந்து தகவல் அளிக்கப்ப டும் என்பதும், அவர்கள் பாதுகாப் பாக தனிமைப்படுத்தப் படுத்தப்படு வார்கள் என்பதும் எந்தளவிற்கு உண்மையென இதன்மூலம் அறிந்து கொள்ளலாம்.

தொடர்பறிதல் எங்கே…

கண்ணீருடன் கொடிசியாவில் நுழைந்த 35 வயது மதிக்கத்தக்க பெண்மணியிடம் விசாரிக்கையில், கொரோனா ஆய்வுக்கு மாதிரி அவ ரால் கொடுக்கப்பட்டபோது அதிக பட்சம் இரண்டு நாட்களுக்குள் பாசிட் டிவ் என தெரியப்படுத்தப்படும் என வும், கொரோனா தொற்று ஏற்படவே இல்லையெனில் தகவலே கொடுக் கப்படாது என அறிவுறுத்தப்பட்டுள் ளார். ஆனால் கொரோனா பரிசோத னைக்கு உட்படுத்தப்பட்டு எட்டு நாள் கழித்தே அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என தெரியப்படுத்தப்படு கிறது. (இது பல இடங்களில் பரவ லாக நடைபெற்று வருகிறது என் பதை சமீபத்திய செய்திகளில் அறிய லாம்.)

 இப்பெண்மணி பிரபல தொலைக் காட்சி ஷோரூமில் சேல்ஸ் டீமில் வேலை செய்பவர். கொரோனா ஆய் விற்கு கொடுக்கப்பட்ட இரு நாட்க ளுக்குப் பின்னர் எத்தகவலும் வராத தால் அவர் மீண்டும் பணிக்குச் சென்று விட்டார். அதோடு தன் வீட்டி லும் வயதான பெற்றோர்களுடனும், தன் குழந்தைகளுடனும் சகஜமாகப் பழகவும் ஆரம்பித்து விட்டார்.

ஆக தனிமைப்படுத்தப்படாமல் இருந்த இந்நாட்களில் எத்தனை பேருக்கு தொற்றை இவர் பரப்பியிருப்பார் என்பது வெள்ளிடை மழை. இதற்கும் கொடிசியாவிற்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்ற கேள்வி இயல்பாக எழுந்தாலும், இப்பணியை மேற் கொள்வதற்காக கொடிசியாவில் பிரத்யேகமாக யார் உள்ளனர் என்ற கேள்விக்கு பதிலில்லை.

 ஆக இவர்களைப் போன்றவர்கள் தாமதமாக வந்தால் அவர்களின் குடும் பம் மற்றும் அவர்கள் சந்தித்தவர்க ளின் பட்டியலை முறையாக தயார் செய்வதிலும், அவ்வனைவரையும் சரியாக கண்காணிப்பதிலும் கொடி சியாவிடம் மட்டுமல்ல, அரசிடமும் எவ்வித அக்கறையில்லை என்பதே நிதர்சணம்.

மேலும், நோயாளிகள் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக கொடிசியாவில் சிறிய திரைகள் அமைக்கப்பட்டு திரைப்படங்களும், பாடல்களும் திரையிடப்படும் என்ற அறிவிப்பும், தனியார் மருத்துவத் தரத் தில் சாமானிய மக்களும் கொடிசியா வில் சிகிச்சை என்ற ஆரம்ப நாட்க ளின் புதுபுதுச் செய்திகள் மறைந்து, தற்போது நாளொன்றுக்கு ஒரு முகக் கவசம் கூட அனைத்து நோயாளிக ளுக்கும் வழங்க முடியாமல் கொடி சியா கைவிரித்து நிற்கும் நிலையே காணப்படுவதாக அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் குரலாக உள்ளது.

மருத்துவர்கள் எங்கே?

தனியார் மருத்துவமனைக்கு இணையான சிகிச்சை என கூறப் பட்ட கொடிசியா சிறப்பு சிகிச்சை மையத்தில் தற்போது ஆறுதலுக்கு கூட ஒரு மருத்துவரும் இருப்பதில்லை என நோயாளிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

காலை, மாலை வேலைகளில் மருந்து, மாத்தி ரைகள் கொடுப்பது முதல் உணவு பரிமாறுவது வரை அனைத்து பணி களையும் அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களே தன்னார்வலர்களாக மேற்கொண்டு வருகின்றனர்.

எப்போதாவது, யோகா பயிற்றுநர் வந்து சில யோகா வகுப்புகளை எடுத்துவிட்டு (கண்ணாடி கூண் டுக்குள் நின்றபடி) செல்பவர். மற்றபடி, அங்கு சிகிச்சை பெற்று வருப வர்களின் மன அழுத்தத்தை போக்கவோ அல்லது உடல் உபாதை களை அறிந்து உரிய சிகிச்சை அளிக்கவோ மருத்துவர்கள் இல்லை என்பதே அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் குற்றச்சாட்டு.

வீடு செல்ல சொந்த ஏற்பாடே

இதேபோல், கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட வர்கள் அதிகபட்சம் 10 நாட்கள் மட்டுமே கொடிசியாவில் அனு மதிக்கப்படுகின்றனர். இதன்பின்னர், அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப் படுகின்றனர்.

இவ்வாறு டிஸ்சார்ஜ் செய்யப்படுபவர்கள் தங்களது வீடு களுக்கு செல்ல எவ்வித வாகன வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தித் தரப்படுவதில்லை. இதனால் அவர்கள் தங்களது சொந்த வாகனத்திலேயோ அல்லது பேருந்து போன்ற பொது போக்குவரத் தையே நாடி செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது.

முன்னதாக, இவர்களுக்கான தொற்று பாதிப்பு குறித்து மீண்டும் பரிசோதனை செய்யாமல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வரும் நிலையில், அவர்கள் வாகன வசதியின்றி பேருந்து, டாக்சி போன்ற பொது போக்குவரத்தில் பய ணிப்பதால் மேலும் பலருக்கு தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

;