tamilnadu

கோவையில் 5 பேருக்கு கொரோனா உறுதி

கோவை, ஜூன் 9- கோவையில் செவ்வாயன்று மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனையில் தொண்டை புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிக்கு கொரோனா உறுதியானதால், இஎன்டி வார்டு மூடப்பட்டுள்ளது.  கோவையில் கடந்த சில நாட்க களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றன. இந்நிலை யில், இன்று 11 வயது சிறுவன் சிறுவன், இரண்டு பெண்கள் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கணுவாய் பகு தியை சேர்ந்த 35 வயது பெண்ணுக்கு, மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரி சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்றுடன் மும்பையில் இருந்து வந்த பயணியிடம் தொடர்பில் இருந்தவர் என்பவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேபோல் சென்னை மயிலாப்பூரில் இருந்து சாலை வழியாக கோவை வந்த வட வள்ளியை சேர்ந்த 27 வயது ஆணுக்கு கொரோனா தொற்று உறுதி செய் யப்பட்டுள்ளது. போத்தனூரை சேர்ந்த 49 வயது ஆணுக்கு தொண்டை புற்று நோய் அறுவை சிகிச்சை செய்யப் பட்ட நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே காட்பாடியில் இருந்து கோவை வந்த 35 வயது பெண் மற்றும் அவரது 11 வயது மகனுக்கு கொரோனா உறுதி யாகியுள்ளது. சென்னை புதுப்பேட் டையில் இருந்து கடந்த 7 ஆம் தேதி கோவை மாவட்டம் பொள் ளாச்சி வந்த இருவருக்கும் மேற் கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோத னையில் கொரோனா உறுதியானது. இதையடுத்து 5 பேரும் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் தொண்டை புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட போத்தனூரை சேர்ந்த 49 வயது ஆணுக்கு கொரோனா உறு தியானதால், கோவை அரசு மருத்துவ மனையில் உள்ள காது, மூக்கு, தொண்டை பிரிவு மூடப்பட்டது. காது, மூக்கு, தொண்டை வார்டில் இருந்த அனைத்து நோயாளிகளும் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் உட்பட 11 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக் கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்றால் பிசியோதெரபி வார்டு, செவிலியர் விடுதியை தொடர்ந்து இஎன்டி வார்டு மூடப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் அரசு மருத் துவமனையில் மூன்று பகுதிகள் மூடப் பட்டுள்ளது நோயாளிகளிடம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

;