tamilnadu

img

வனத்துறை சார்பில் ரூ.9.50 லட்சம் மதிப்பிலான மரங்கள் ஏலம்

மேட்டுப்பாளையம், ஆக.30- மேட்டுப்பாளையத்தில் வனத்திற்குள் வீசும் பலத்த காற்றில் சாய்ந்த மரங்கள், மரக்கடத்தலின் போது பிடிபட்ட மரங்கள் என ரூ.9.50 லட்சம் மதிப்பிலான மரங்கள் ஏலம் விடப்பட்டன. கோவை வனக்கோட்டத்திற்கு உட் பட்ட மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் வனத்துறைக்கு சொந்தமான மரக்கி டங்குஉள்ளது. அரசுக்கு சொந்தமான இம்மரக்கிடங்கில், அடர்ந்த வனப்ப குதிக்குள் கனமழையால் ஏற்படும் மண்சரிவுகள் மற்றும் பலத்த காற்று காரணமாக சாய்ந்து விழும் மரங்கள் போன்றவை வனத்துறையால் சேகரிக் கப்பட்டு இருப்பு வைக்கப்படும். மேலும், மரக்கடத்தலில் ஈடுபடுவோர் பிடிபட்டு அவர்களிடம் இருந்து பறிமுதல் செய் யப்படும் மரங்களும் வழக்கு முடியும் வரை இங்கு தான் இருப்பு வைக்கப்ப டுவது வழக்கம். வனத்தை ஒட்டிய பகுதி யில் ஆண்டுக்கணக்கில் அடுக்கி வைக்கப் பட்டுள்ள இம்மரங்களை கரையான் உள்ளிட்ட பூச்சிகளின் தாக்குதல் காரண மாக யாருக்கும் பயனின்றி வீணாகும் சூழல் உருவானது. இதனால், தமிழக அரசின் அனுமதியோடு இவற்றை ஏலம் மூலம் வனத்துறை விற்பனை செய்யும்.  இதன்படி, மேட்டுப்பாளையம் அரசு மரக்கிடங்கில் இருப்பில் இருந்த விலை உயர்ந்த மரங்களாக கருதப்படும் தேக்கு மற்றும் ஈட்டி மரங்கள் ஏலம் விடப்பட்டது. வனத்துறையால் நடத்தப்பட்ட இந்த மர ஏலத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏற்கனவே பதிவு பெற்ற வன ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு மரத்தின் நீளம் மற்றும் சுற்றளவின் அடிப்படையில் குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டு மரங்கள் ஏலம் விடப்பட்டது.  கோவை வனக்கோட்ட உதவி வன  பாதுகாவலர்கள் தினேஷ்குமார், செந்தில் குமார் மற்றும் மேட்டுப்பாளையம் வனச் சரக அலுவலர் செல்வராஜ் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த ஏலத்தில் 63 குவியல் மரங்கள் ரூ.9.50 லட்சம் வரை ஏலம் போனது. இது போல இயற்கை சீற்றத்தால் விழுந்து விடும் மரங்கள் மற்றும் மரக்கடத்தல் வழக்குகள் முடிந்த மரங்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் பணம் காடு வளர்ப்பு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

;