tamilnadu

img

கொரோனா கால நிவாரணத் தொகை கோரி வீடு திரும்பா போராட்டம் நடத்த அனைத்து தொழிற்சங்கங்கள் முடிவு

கோவை, ஜூலை 29-  தமிழக முதல்வர் அறிவித்த கொரோனா கால நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி வீடு திரும்பா போராட் டம் நடத்துவதென கோவையில் அனைத்து  கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தினர் கூட்டு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள் ளது. கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா உடல் உழைப்புத் தொழிலாளர் சங்கங் களின் நிர்வாகிகள் கூட்டம் செவ்வாயன்று பாப்பநாயக்கன் பாளையம் ஏஐடியுசி சங்க  அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு ஏஐடியுசி பொது செயலாளர் என்.செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில், ஏடிபி சங்க பொதுச்செயலாளர் ஜி.முரு கேசன், எல்பிஎப் சங்க பொதுச்செயலாளர் வே.கிருஷ்ணசாமி, கோயமுத்தூர் லேபர் யூனியன் பொதுச்செயலாளர் ஆர்.பால கிருஷ்ணன், ஐஎன்டியுசி சங்க பொதுச் செயலாளர் சிரஞ்சீவி கண்ணன், எச்எம்எஸ் சங்க பொதுச்செயலாளர் ஜி.மனோகரன், சிஐடியு சங்க பொதுச்செயலாளர் ஆர்.பழனி சாமி, பிஎம்.எஸ் சங்க பொதுச்செயலாளர் பி.முருகேசன் ஆகியோர் கலந்து கொண்ட னர்.  

இதில், த கட்டிடம் மற்றும் அமைப்பு சாரா உடலுழைப்புத் தொழிலாளர் நல  வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழி லாளர்களுக்கு கொரோனா ஊரடங்கு கால வேலையில்லா நிவாரணமாக முதல் கட்டமாக தலா ஆயிரம் ரூபாயும், இரண்டாவது கட்டமாக தலா ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார். ஆனால், அந்த நிவாரண தொகை கோவை மாவட்டத்திலுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர் களுக்கு நான்கு மாதங்கள் கடந்தும் தற் போது வரை கிடைக்கவில்லை. இதனால் தொழிலாளர்கள் கடும் அதிருப்திக்குள்ளாகி உள்ளனர். எனவே, வருகின்ற 2020 ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் வாரியத்தில் பதிவு பெற்று புதுப்பித்தல் உள்ள அனைத்து தொழிலாளர் களுக்கும் முதல்வர் அறிவித்த கொரோனா கால நிவாரண நிதி கொடுக்கப்பட வேண் டும். தவறும் பட்சத்தில் ஆகஸ்ட் 12 ஆம்  தேதி நிவாரணம் கிடைக்காத தொழிலாளர் களுடன் அனைத்து தொழிற்சங்க தலைவர் களும் இணைந்து நலவாரியத்திற்கு வந்து  நிவாரணம் கிடைக்கும் வரை வீடுதிரும்பா போராட்டம் நடத்துவது என இந்த கூட்டத் தில் முடிவு செய்யப்பட்டது.

;