tamilnadu

img

அமெரிக்காவில் இந்த ஆண்டுக்குள் கொரோனா தடுப்பு மருந்து?

டிரம்பின் கருத்துக்கு அதிகாரி மறுப்பு

அமெரிக்காவின் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பின் தலை வர், அந்நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் இந்த வருட இறுதிக்குள் கோவிட் 19க்கான தடுப்பு மருந்து தயாராகும் என தெரிவித்தது குறித்து சந்தேகம் தெரிவித்துள் ளார். தடுப்பு மருந்து எப்போது தயாராகும் என்பதை என்னால் கூற இயலாது என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் நிர்வாக ஆணையர் ஸ்டீபன் ஹான் தெரி வித்துள்ளார்.

தடுப்பு மருந்து உருவாக்கம் என்பது தரவு களையும், அறிவியலையும் பொறுத்தது எனவும் தடுப்பு மருந்து, மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு, வைரஸுடன் போராடுவதற்கு ஏற்றவாறு பயிற்சியளிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையின் கொரோனா தடுப்பு படையின் உறுப்பினரான ஹானிடம், இந்த ஆண்டுக்குள் கொரோவிற்கான தடுப்பு மருந்து தயாராகும் என டிரம்ப் கூறியது குறித்து கேட்கப்பட்டது. கொரோனாவுக்கான தடுப்பு மருந்து மற்றும் அதற்கான சிகிச்சைகள் குறித்து டிரம்ப் கூறி வரும் சில கருத்துக்கள் விமர்ச னங்களுக்கு உள்ளாகி வருகின்றன. அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ள னர்.

சமீப நாட்களில் மேற்கு மற்றும் தெற்கு மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவு கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் இதுவரை 20 லட்சத்து 80 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கொரோனா வைரஸுக்கு எதிரான வலுவான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க முடியாமல் போக லாம் என ஜூன் மாதம் எச்சரிக்கை விடுத்தி ருந்தார்.

“ஒரு வருடத்திற்குள் தடுப்பு மருந்து கண்டறியப்படும் என்பதுதான் கணிப்பு. அந்த முயற்சி தீவிரப்படுத்தப்பட்டால் சில மாதங்களில் கண்டுபிடிக்கலாம் என விஞ்ஞா னிகள் தெரிவிக்கின்றனர்,” என்று டெட்ரோஸ் கூறினார். இன்னும் சில நிபுணர்கள், குறைந்தது அடுத்த ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் வரை தடுப்பு மருந்து கிடைப்பது கடினம் என தெரிவிக்கின்றனர்.

ஏபிசி நியூஸ் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த நேர்காணலில், “தடுப்பு மருந்து உருவாக்கும் பணி அதீத வேகத்துடன் நடை பெற்று வருகிறது. இருப்பினும் அது  எப்போது கிடைக்கும் என்பது தெரிய வில்லை” என ஹான் தெரிவித்தார். மேலும் சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், “கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 99 சதவீதம் பேருக்கு அது எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என டிரம்ப் கூறியது குறித்து தான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று அவர் கூறினார்.

தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. மார்ச் மாதம் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர், சர்வ தேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக் கப்பட்டவர்களில் 3.4% பேர் உயிரி ழந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். பொதுவாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்த அல்லது மிதமான அறிகுறிகளே தென்படுகின்றன என்றும், தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 20% பேருக்கு செயற்கை சுவாசம் தேவைப் படுகிறது எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது.

பொதுவாக ஒரு தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப் பல வருடங்கள் ஆகும். ஆனால் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பு மருந்தை துரிதமாக கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க சுகாதார அதிகாரிகள், 2020ஆம் ஆண்டின் இறுதிக்குள் அல்லது 2021ஆம் ஆண்டின் தொடக்கத்திற்குள் தடுப்பு மருந்து தயாரிக்கும் பணிகள் நடை பெறலாம் எனத் தெரிவிக்கின்றனர்.ஆனால்  அதை எச்சரிக்கையுடன் கூடிய ஒரு நம்பிக்கையாக தான் அவர்கள் வெளிப் படுத்தி வருகின்றனர்.

;