tamilnadu

img

கொரோனா வைரஸ் : அமெரிக்கா மீது சீனா குற்றச்சாட்டு

பெய்ஜிங் 
உலகை தனது உள்ளங்கையில் வைத்து ஆட்டிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதலின் சீற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சீனாவில் மட்டும் 350-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 15,000-க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 400-க்கும் அதிகமானோர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.தாய்லாந்து மருத்துவர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மருந்து கண்டுபிடித்ததாகக் கூறியுள்ளது சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. 

இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய தருணத்தில் தங்கள் நாட்டவரை மீட்பதிலும், சீனாவுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு பயண அறிவுரையையும் முதலில் வழங்கிய நாடு அமெரிக்கா தான். ஞாயிறன்று சீனாவுக்கு சென்று வந்த மற்ற நாட்டவர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழையக் கூடாது என அமெரிக்கா  தடை விதித்தது.

இந்த விவகாரம் காரணமாகச் சீனா கடும் அதிருப்தியில் உள்ளது. சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்-யிங் அமெரிக்காவின் செயல் குறித்துக் கூறியதாவது,"அமெரிக்கா தனது தூதரக ஊழியர்களை திரும்பப் பெற பரிந்துரைத்தது மட்டுமின்றி சீனப் பயணிகள் மீது பயணத் தடையை விதித்த முதல் நாடு ஆகும். உதவியை வழங்குவதற்குப் பதிலாக, கொரோனா வைரஸ் பரவுவது குறித்து சீனா மீது அச்சத்தை உருவாக்கும்  வகையில் அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகளை மீறி, பயணம் மற்றும் வர்த்தகம் தொடர்பாக அதீத கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்து வருகிறது. இது மோசமான எடுத்துக்காட்டு. எனினும் நியாயமான, அமைதியான மற்றும் அறிவியலை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கைகளை மற்ற நாடுகள் எடுக்கும் என்று சீனா நம்புகிறது" எனக் கூறினார்.

;