tamilnadu

img

வுஹான் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்தனர்...  சீன அரசு தகவல்

பெய்ஜிங்
உலகில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுஹான் நகரில் பரவியது (?) கண்டறியப்பட்டது. பரவிய ஒரே மாதத்தில் வுஹான் நகரில் கடுமையான சேதத்தை உருவாக்கிய கொரோனா அங்கு 3000-க்கும் அதிகமானோரை காவு வாங்கியது.

தொடர்ந்து சீனாவின் மற்ற மாகாணங்களுக்கும் பரவிய நிலையில், அரசின் சாமர்த்திய நடவடிக்கையால் கொரோனா மேற்கொண்டு பரவாமல் நாடு முழுவதும் கட்டுக்குள் வந்துள்ளது. வுஹான் நகரம் இன்று நிலையில் கொரோனா இல்லாத நகரமாகிவிட்டது. காரணம் அந்நகரில் ஏற்கெனெவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்துள்ள நிலையில், புதிய தொற்றுக்கள் எதுவும் இல்லை என்பதால் அப்பகுதியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் கொரோனா இல்லாத நகராக வுஹான் அறிவிக்கப்பட்டுள்ளது.  

சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 80% பேர் வுஹானைச் சேர்ந்தவர்கள் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.   
 

;