tamilnadu

img

நாட்டுமாட்டுப் பாலில் தங்கம் இருக்கிறது

கொல்கத்தா:
நாட்டுமாட்டுப் பாலில் தங்கம் இருப்பதாக மேற்குவங்க மாநில பாஜகதலைவரான திலீப் கோஷ், திடீர் புரளிஒன்றைக் கிளப்பியிருக்கிறார்.கொல்கத்தாவிலிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள பர்த்வானில் “கோபா அஷ்டமி காரியக்ரம்” என்ற நிகழ்ச்சி நடைப்பெற்றுள்ளது. இதில் மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் பங்கேற்றுப் பேசியிருக்கிறார்.அப்போது, “சில அறிவுஜீவிகள் சாலைகளில் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். நான் அவர்களிடம் சொல்கிறேன்: ஏன் மாட்டுக் கறி மட்டும் சாப்பிடுகிறீர்கள், நாய் இறைச்சியையும் சாப்பிடுங்கள். எந்த மிருகத்தைச் சாப்பிட்டாலும் உங்கள் உடல் நிலை நன்றாகஇருக்கிறதுதானே!” என்று கடும் ஆத்திரத்தை வெளிப்படுத்தி உள்ளார். 

“இந்தியா கிருஷ்ணரின் பூமி. இங்குநாங்கள் பசுவை மதிக்கிறோம். இனியும் அப்படித்தான் இருப்போம். இந்தியாவின் புனித மண்ணில் மாடுகளைக்கொல்வதும் மாட்டிறைச்சி சாப்பிடுவதும் குற்றம்” என்று கொந்தளித்திருக்கும் அவர், “பசு எங்கள் தாய், நாங்கள் மாட்டுப் பாலைக் குடிப்பதால்தான் உயிருடன் இருக்கிறோம்” என்றும் புல்லரித்துள்ளார்.இந்த இடத்தில், “இந்தியாவின் நாட்டுமாடுகள் மட்டுமே எங்கள் தாய். வெளிநாட்டு மாடுகள் அல்ல” என்று மாடுகளிலும் பேதம் பிரிப்பதற்கு திலீப் கோஷ் தவறவில்லை.எல்லாவற்றுக்கும் மேலாக, “நாட்டுப் பசும்பாலில் தங்கம் இருக்கிறது” என்று போகிறபோக்கில் புரளிஒன்றை கிளப்பிவிட்டுள்ள திலீப் கோஷ், “அதனாலேயே அது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. நாட்டுப்பசுமாட்டின் காம்பில் சூரியஒளி படும் போது பாலில் தங்கம் உருவாகிறது” என்றெல்லாம் கதையடித்துள்ளார்.“வெளிநாட்டுப் பெண்களைத் திருமணம் செய்தால் சிக்கல் வருவதுபோல் வெளிநாட்டுப் பசுக்களாலும் சிக்கல்வரும்” என்றும் ஏதேதோ உளறிக்கொட்டியிருக்கிறார்.

;