tamilnadu

img

கேரள முதல்வரின் ஊடகச் செயலாளர் பி.எம்.மனோஜ்

திருவனந்தபுரம்:
மூத்த ஊடகவியலாளர் பி.எம்.மனோஜ் கேரள முதல்வர் பினராயி விஜயனின் ஊடகப் பிரிவுச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ளார். தேசாபிமானி நாளிதழில் ரெஸிடெண்ட் எடிட்டராகப் பணியாற்றிவரும் பி.எம்.மனோஜ் தனது புதிய பொறுப்பிற்காக விடுப்பில் சென்றுள்ளார். 1987ஆம் ஆண்டு உதவி ஆசிரியராக தேசாபிமானியில் தனது பத்திரிகைப் பணியைத் துவக்கிய அவர் 1996ஆம் ஆண்டு  பினராயி விஜயன் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தபோது அவரது ஊடகப்பிரிவுக்குழுவில் இடம்பெற்றிருந்தார். 
 

;