tamilnadu

img

சொப்னாவின் 2 வங்கி லாக்கர்களில் இருந்தது ஒரு கோடி ரூபாய்; ஒரு கிலோ தங்க நகைகள்

கொச்சி, ஜூலை 26- தங்க கடத்தல் வழக்கில் இரண்டா வது குற்றவாளியான சொப்னா சுரே ஷின் 2 வங்கி லாக்கர்களில் இருந்து ஒரு கோடி ரூபாயும் ஒரு கிலோ தங்க மும் என்ஐஏ கைப்பற்றியுள்ளது.  பெடரல் வங்கியின் திருவனந்த புரத்தில் உள்ள இரண்டு கிளைகளில் இவை பாதுகாக்கப்பட்டிருந்தன. சொப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகி யோரது காவல் முடிந்து ஆஜர்படுத்திய போது இவற்றை கொச்சியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ ஒப்படைத்தது. திருவனந்தபுரம் பெடரல் வங்கி யின் ஒரு கிளையில் சொப்னாவின் பெய ரில் ரூ.36.5 லட்சமும், மற்றொரு கிளை யில் ரூ.64 லட்சமும், 982 கிராம் தங்க மும் கண்டுபிடிக்கப்பட்டன. தங்க கடத்தல் மூலம் இவற்றை சொப்னா சம்பாதித்திருப்பதாக என்ஐஏ கருது கிறது. இதை உறுதிப்படுத்த மேலும் விசாரணை நடத்தப்படுவதாகவும், வங்கியும் லாக்கர்களும் பயன்படுத்தி யது குறித்து விசாரணை நடத்தப்படு வதாகவும் விசாரணைக்குழு நீதி மன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால் இவை சொப்னாவின் பாரம்பரிய சொத்து மூலம் கிடைத்தவை என அவரது வழக்கறி ஞர் நீதிமன்றத்தில் வாதாடினார். சொப்னா சுரேஷ், முதல் குற்றவாளி யான பி.எஸ்.சரித், நான்காவது குற்ற வாளியான சந்தீப் நாயர் ஆகியோர் என்ஐஏ காவல் முடிந்து வெள்ளி யன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டனர். இவர்களிடம் நடத்திய விசா ரணையில் தங்கம் கடத்தல் உட்பட மற்ற வர்கள் குறித்த விவரங்கள் கிடைத்துள் ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது. மலப்புறத்தில் கைது செய்யப்பட்ட கே.டி.ரமீஸ் தங்க கடத்தலில் வகித்த முக்கிய பங்கு குறித்து மூன்று குற்ற வாளிகளும் விரிவான வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் காவல் அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

சுங்கத்துறையினரின் கைது
சொப்னா, சந்தீப் நாயர் ஆகி யோரை பெங்களுருவில் என்ஐஏ கைது செய்து விசாரித்து வந்தது. இந்நிலை யில் சுங்கத்துறையினர் வெள்ளியன்று காலை கொச்சியில் உள்ள என்ஐஏ தலைமை அலுவலகத்துக்கு வந்து சொப்னாவிடமும் சந்தீபிடமும் வாக்கு மூலம் பெற்றனர். அதைத் தொடர்ந்து கைது செய்வதற்கான மனுவை என்ஐஏ நீதிமன்றத்தில் அளித்தனர். அதன்படி மாலையில் இருவரையும் நீதிமன்றத் தில் என்ஐஏ ஆஜர்படுத்திய போது சுங்கத்துறையினர் கைது செய்தனர். ஆகஸ்ட் 21 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர்கள் மூவரும் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். ஏற்கனவே சரித்தை தங்களது காவலில் எடுத்து விசாரித்து விட்டனர். இந்நிலையில் சொப்னாவையும், சந்தீ பையும் தங்களது காவலில் எடுத்து விசாரிக்க சுங்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. வெள்ளி யன்று நீதிமன்றத்தில் தனக்கு மனநல சிகிச்சை தேவைப்படுவதாக சொப்னா கேட்டுக் கொண்டார். சிறையில் இருந் தாலும் கணவனையும் மகளையும் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்க னவே சொப்னா தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு புதனன்று (ஜுலை 29) விசாரணைக்கு வருகிறது.

;