tamilnadu

img

ரூ. 45 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டி கேரள சுற்றுலாத்துறை சாதனை

திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்திற்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையானது, 2019-ஆம் ஆண்டில், முந்தைய 23 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, அதிகரித் துள்ளது.2019-ஆம் ஆண்டில், 1 கோடியே 96 லட்சம் பேர்கேரளத்திற்கு வந்துள்ளனர். இவர்களில் 1 கோடியே83 லட்சம் பேர் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து வந்துள்ளனர். 11 லட்சத்து 89 ஆயிரம் பேர் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வந்துள்ளனர்.

1 கோடியே 96 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகைஎன்பது, முந்தைய 2018-ஆம் ஆண்டைக் காட்டிலும் 17.2 சதவிகிதம் அதிகமாகும். சுற்றுலா மூலம் மாநிலத்திற்குக் கிடைத்த மொத்த வருவாய் 45 ஆயிரத்து10 கோடியே 69 லட்சம் ரூபாய். முந்தைய ஆண்டின்வருவாயோடு ஒப்பிட்டால் இது 24.14 சதவிகிதம் அதிகம்.“2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக 2 ஆண்டுகளும் வெள்ளம் மற்றும் மழையால்கேரளம் பாதிப்பைச் சந்தித்தது. எனினும், சுற்றுலாத்துறையில் மிகுந்த ஆற்றலுடன் கேரளம் சாதித்துள்ளது. 1 கோடியே 96 லட்சம் சுற்றுலாப் பயணிகள் என்ற எண்ணிக்கை 1996-ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக அதிகமான வளர்ச்சி விகிதம்” என்று கேரளசுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியுள்ளார்.இந்த வளர்ச்சி வேகத்தை தக்கவைத்துக் கொள்ளமுடியும் என்ற நம்பிக்கையும் தங்களுக்கு இருப்பதாக கூறியுள்ள சுரேந்திரன், கொரோனா வைரசுக்கு மருத்துவ உலகம் எவ்வளவு விரைவாக ஒரு தீர்வைக் காண்கிறது என்பதைப் பொறுத்தும் இது அமையும் என்பதையும் மிகுந்த நிதானத்துடன் பதிவுசெய்துள்ளார்.

;